உடல் பருமன் என்பது ஒருவரின் ஆரோக்கியத்துடன் நேரடியான தொடர்புடையது, இது ஒரு சிக்கலான, தொடர்ச்சியான நிலையாகும், இது அதிகப்படியான உடல் கொழுப்பு மற்றும் சில நேரங்களில் ஆரோக்கியத்தை மோசமாக்கும். எடை அதிகரிப்பு என்பது, நமது உடலுக்கு தேவையானதைவிட அதிக கலோரிகள் உடலுக்கு கிடைப்பதால் ஏற்படுவது என்பது பொதுவான நம்பிக்கை ஆகும். அதாவது நமது உடல் பயன்படுத்தக்கூடியதை விட அதிக கலோரிகளை உண்பதால் ஏற்படும் பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு ஆகும்.
உடல் பருமன் என்பது இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை எழுப்பும் மருத்துவ நிலை ஆகும். பொதுவாக மரபணு, உடலியல், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை என பல காரணிகளால் உருவாகிறது உடல் பருமன்.
மேலும் படிக்க | ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்கணுமா? இந்த 4 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும்
ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி என பல விஷயங்கள் நமது உடல் எடையை தீர்மானிக்கின்றன. ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம்.
பாடி மாஸ் இண்டெக்ஸ் மூலம் நமது எடை அளவுகள் மற்றும் அளவை அறிவது ஒருபுறம் என்றால், நம் உடல் அதிக எடையுடன் இருப்பதை அளவிடுவதற்கான மருத்துவ அறிகுறிகளை ஆயுர்வேதம் அளவிடுகிறது.
ஆயுர்வேதத்தின்படி,. உடல் பருமனின் எட்டு ஆரம்ப அறிகுறிகள் என்ன தெரியுமா? உடல் பருமனின் 8 ஆரம்ப அறிகுறிகள் இவை....
அதிக தாகம்
சோர்வு
ஆழ்ந்த தூக்கமின்மை
சுவாச பிரச்சனை
அதீத பசி
அதிகப்படியான வியர்வை
மோசமான உடல் துர்நாற்றம்
உடலில் மந்தத்தன்மை
மேலும் படிக்க | காலை உணவில் இதையெல்லாம் சேர்த்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்
ஒரு நபரின் உடல், தனக்கு தேவையான ஆற்றலைவிட அதிக கலோரிகளை பெறும்போது, கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பாகத் தங்கிவிடுகின்றன. பர்கர்கள், பீட்சாக்கள், வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், குக்கீகள் அல்லது கேக்குகள் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், மதுபானங்கள் மற்றும் பிற உணவுகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பும்போது நீங்கள் பலதரப்பட்ட உணவை அனுபவிக்க விரும்பினால், உங்கள் உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவைச் அதிகம் சேர்க்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குச்சிக் கிழங்க இப்படி சாப்பிட்டு பாருங்க! ஒல்லிக் குச்சி உடம்பு கேரண்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ