Piles Cure: ஆபரேஷன் இல்லாமல் பைல்ஸுக்கு நிவாரணம் பெற இவற்றை உணவில் சேருங்கள்

Piles Control: பைல்ஸ் ஆரம்ப நிலையில் இருந்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். பைல்ஸ் பிரச்சனை இருந்தால், பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 29, 2022, 06:48 PM IST
  • வயிற்றில் ஏதேனும் நோய் இருந்தால், அந்த நோய்க்கான சிகிச்சையில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • நீங்கள் பைல்ஸால் பாதிக்கப்பட்டிருந்தால், நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  • இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும்.
Piles Cure: ஆபரேஷன் இல்லாமல் பைல்ஸுக்கு நிவாரணம் பெற இவற்றை உணவில் சேருங்கள் title=

பைல்ஸ் என்பது ஒரு தீவிர நோயாகும். இதில் நோயாளியின் மலக்குடல் வீக்கமடைகிறது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக வலியைத் தாங்க வேண்டியிருக்கும். இரண்டு வகையான பைல்ஸ் உள்ளன. ஒன்று உட்புற பைல்ஸ் மற்றொன்று வெளிப்புற பைல்ஸ். உட்புற மூல நோயில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. வெளிப்புற மூல நோய்களில் ஆசனவாயைச் சுற்றி வீக்கமடைவதால் கடுமையான வலி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. நாள்பட்ட வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல், நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்து இருப்பது, மலம் கழிக்கும் போது சிரமப்படுதல், எடை அதிகரிப்பு, கனமான பொருட்களை தூக்குதல் போன்றவற்றால் பைல்ஸ் ஏற்படலாம். உணவு மற்றும் பானங்களில் சரியான கவனம் செலுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும்.

பைல்ஸ் இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்?

பைல்ஸ் ஆரம்ப நிலையில் இருந்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். பைல்ஸ் பிரச்சனை இருந்தால், பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக தண்ணீர் குடிக்கவும்

வயிற்றில் ஏதேனும் நோய் இருந்தால், அந்த நோய்க்கான சிகிச்சையில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் பைல்ஸால் பாதிக்கப்பட்டிருந்தால், நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். ஒரு நாளைக்கு குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், உடல் நீரேற்றமாக இருக்கும், இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். போதுமான நீர் உடலில் இருப்பது மலம் கழிப்பதையும் எளிதாக்குகிறது. குடிநீருடன் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, வெள்ளரி, கேரட் போன்றவற்றின் சாறும் அருந்தலாம். இது மிகவும் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சனை அதிகரிக்கும் ஜாக்கிரதை!! இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும் 

முழு தானியங்களை சாப்பிடுங்கள்

முழு தானியங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது பைல்ஸ் நோயில் அதிக நன்மை பயக்கும். பைல்ஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஓட்ஸ், பழுப்பு அரிசி மற்றும் கோதுமை போன்ற முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முழு தானியங்களை உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

பழங்கள் பயனளிக்கும்

பழங்களை உட்கொள்வது பைல்ஸ் அறிகுறிகளைக் குறைக்கும். வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன, இது மூல நோயை குணப்படுத்த உதவுகிறது. இதனுடன் இரவு உணவில் பப்பாளியை கண்டிப்பாக சாப்பிடுங்கள். இதனால் மலச்சிக்கல் ஏற்படாது. இதனால் மலம் கழிக்கும் போது வலி ஏற்படாது.

பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும்

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் பலவிதமான ஆண்ட்-ஆக்சிடெண்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை பைல்ஸின் அறிகுறிகளைக் குறைக்கின்றன. கீரை, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகளை உட்கொள்ளலாம். 

மோர் குடிப்பதால் நிவாரணம்

மோர் குடிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. இது நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. மோர் உங்கள் உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்றுநோயைக் குறைக்க உதவுகிறது. மோரை உட்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டால் பைல்ஸ் அறிகுறிகளை திறம்பட குறைக்கலாம். 

மூலிகை தேநீர் பயனுள்ளதாக இருக்கும்

நீங்கள் பைல்ஸால் பாதிக்கப்பட்டிருந்தால், மூலிகை டீ குடிப்பது மிகவும் உதவியாக இருக்கும். மூலிகை தேநீர் உட்கொள்வது வீக்கத்தை குறைக்கிறது மற்றும் குடல் இயக்கத்தின் போது இரத்தப்போக்கையும் குறைக்கிறது. சந்தையில் பல வகையான மூலிகை டீக்கள் கிடைக்கின்றன. மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு சரியான மூலிகை தேநீரைத் தேர்வு செய்யலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை பாடாய் படுத்துதா? இந்த 5 உணவுகளை டயட்டில் சேருங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News