ஜர்னல் ஆஃப் தி சயின்ஸ் ஆஃப் ஃபுட் அண்ட் அக்ரிகல்ச்சர் நடத்திய ஆய்வின்படி, பிரஷர் சமையல் உணவிn லெக்டின் உள்ளடக்கத்தை குறைக்கிறது. லெக்டின் என்பது ஒரு தீங்கு விளைவிக்கும் இரசாயனமாகும், இது தாதுக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுப்பதன் மூலம் உணவின் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கிறது.
பிரஷர் குக்கரில், நீராவியின் அழுத்தத்தைப் பயன்படுத்தி உணவை சமைக்கும் பிரஷர் குக்கிங், சமையல் செயல்முறையை கணிசமாக துரிதப்படுத்துகிறது. எனவே, இது மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது.
ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படி, எல்லா உணவுகளையும் குக்கரில் சமைப்பது நல்லதல்ல. அதிலும், மாவுச்சத்துள்ள உணவுகள் குக்கரில் சமைக்கும் போது, அவை அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனத்தை உருவாக்குகின்றன, இது தொடர்ந்து உட்கொள்ளும் போது புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க | தொப்பையை 10 நாளில் பாதியாக குறைக்கும் பிளாங்க் பயிற்சி... எளிதாக செய்யும் முறை..!
ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பிரஷர் குக்கர் வித்தியாசமாக செயல்படுகிறது. அரிசியை, சாதாரணமாக வேக வைப்பதற்கு, குக்கரில் சமைப்பதற்கும் நிறைய வித்தியாசமாகிறது. ஆனால், இறைச்சியைப் பொறுத்தவரை, குக்கரில் சமைத்த இறைச்சி/ஆட்டிறைச்சி திறந்த பாத்திரத்தில் சமைப்பதை விட எளிதில் ஜீரணமாகும் தன்மையைப் பெறுகிறது.
பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத உணவுகள்
அரிசி
அரிசியை ஒருபோதும் குக்கரில் சமைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அரிசியில் உள்ள மாவுச்சத்து குக்கரில் தயாரிப்பதன் மூலம் ரசாயனங்களை வெளியிடும். பிரஷர் குக்கரில் செய்யப்படும் சாதம் உங்கள் உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.எனவே குக்கரில் சமைத்த சாதத்தை சாப்பிட வேண்டாம்.
நூடுல்ஸ்
நூடுல்ஸை குக்கரில் சமைக்கவே கூடாது. ஏனெனில் இதில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனால்தான் நூடுல்ஸை எப்போதும் வோக் அல்லது பாத்திரத்தில் செய்ய வேண்டும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் சமைத்த பிறகு சாப்பிடக் கூடாது. ஏனென்றால், உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் சமைப்பது அதன் சுவையை மட்டுமல்ல சத்தையும் அழித்துவிடும், குக்கரில் வேக வைக்கப்படும் உருளைக்கிழங்கை உட்கொள்வது ஆரோக்கியத்தை கெடுக்கும்.
மேலும் படிக்க | ஒரு மாதம் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால் என்ன ஆகும்... நிபுணர்கள் கூறுவது என்ன!
மீன்
பலர் மீன் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் பிரஷர் குக்கரில் மீன் சமைத்தால் பல நோய்கள் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா.அதனால்தான் குக்கரில் மீனை சமைக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
பாஸ்தா
பாஸ்தாவை பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாது. ஏனென்றால் இதில் மாவுச்சத்து உள்ளது, இதன் காரணமாக இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அதன் சுவையும் மோசமாக இருக்கும். அதனால்தான் அதை ஒரு பாத்திரத்தில் அல்லது வாணலியில் மட்டுமே சமைக்கவும்.
கிழங்கு வகைகள்
அதேபோல, கிழங்கு வகைகள், உருளைக்கிழங்கு, மரவள்ளி, சர்க்கரைவள்ளிகிழங்கு, தானியங்கள், கிழங்குகள் போன்ற மாவுச்சத்து கொண்ட உணவுகளை குக்கரில் சமைக்க வேண்டாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ