உங்கள் பிள்ளை உயரமாக வளர ... 'இந்த' ஹோம் மேட் ஊட்டச்சத்து பவுடர் உதவும்!

Homemade Powder to Increase Kid's Height: உங்கள் குழந்தையின் உயரம் குறைவாக என்று கவலையாக உள்ளதா... கவலையை விடுங்கள். குழந்தையின் உயரத்தை அதிகரிக்க உதவும், வீட்டிலேயே தயாரிக்க கூடிய ஊட்டச்சத்து பவுடர் ஒன்றின் ரெசிபியை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2024, 07:41 PM IST
உங்கள் பிள்ளை உயரமாக வளர ... 'இந்த' ஹோம் மேட் ஊட்டச்சத்து பவுடர் உதவும்! title=

உங்கள் பிள்ளை உயரமாக வளர உதவும் ஹோம் மேட் பவுடர்: குழந்தைகள் உயரமாக வளர பெற்றோர்கள் அவர்களுக்கு, அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த சரிவிகித உணவை கொடுத்து வர வேண்டும். உணவில் ஊட்டச்சத்து இல்லை என்றால், ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படுவது சாத்தியம் இல்லை. வளர்ச்சியில் குறைபாடு ஏற்பட்டால், குழந்தைகளின் உடல்நலன் மட்டுமல்ல மன நலனையும் அது பாதிக்கும். குழந்தைகளின் தன்னம்பிக்கை குறைந்து போனால் அவர்களது எதிர்காலத்தை அது பாதிக்கும்.

குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள்

குழந்தையின் உயரத்தை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்து பவுடர் உடல் வளர்ச்சி சரியாக இல்லை என்றால், குழந்தையின் உயரம் அதிகரிக்காது. போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாத போது, உயரத்தில் குறைபாடு ஏற்படக்கூடும். மேலும், குழந்தையின் உடலில் ஹார்மோன் சிறப்பு சீராக இல்லை என்றாலும், குட்டையாக இருப்பார்கள். உடல் உயரத்திற்கு தேவையான பிட்யூட்டரி ஹார்மோன் சுரப்பி சீராக இருக்க வேண்டும். குழந்தைகள் உயரமாக வளர, புரதச்சத்து கால்சியம் சத்து ஆகியவை (Health Tips) மிக அவசியம்.

குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும் ஹோம் மேட் பவுடர்

உங்கள் குழந்தைகளின் உயரம் அதிகரிக்க, வீட்டிலேயே ஒரு பிரத்தியேகமான பொடியை தயாரித்து பாலுடன் கொடுப்பதால், சிறந்த பலன் கிடைக்கும் என்று டாக்டர் நிஷா குப்தா என்பவர் அதற்கான ரெசிபியை பகிர்ந்து கொண்டு உள்ளார்.

ஹோம் மேட் பவுடர் தயாரிக்க தேவையானவை

1. பாதாம் பருப்பு 100 கிராம்

2. மக்கானா 200 கிராம்

3. எள்ளு 50 கிராம்

4. பெருஞ்சீரகம் அல்லது சோம்பு 100 கிராம்

உயரத்தை அதிகரிக்கும் ஹோம் மேட் பவுடர் தயாரிக்கும் முறை

எள், மக்கானா, பாதாம் பருப்பு, பெருஞ்சீரகம் ஆகியவற்றை, தனித்தனியாக இழுப்ப சட்டியில் வறுத்து எடுத்து, நைசாக மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும். இதை காற்று போகாத ஒரு கண்ணாடி பாட்டிலிலோ அல்லது தரமான பிளாஸ்டிக் பாட்டிலிலோ வைத்துக் கொள்ளலாம். இந்த பவுடரை தினமும் குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் உடல் மன வளர்ச்சி மிகவும் சிறப்பாகவும் துரிதமாகவும் இருக்கும். இந்த ஆரோக்கிய பானத்தை, தொடர்ந்து பருகி வந்தால் கை மேல் பலனை காணலாம்.

மேலும் படிக்க | வயசான காலத்தில் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமா? அப்போ இதைசெய்யுங்க..

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பை சாப்பிடுவதால்,  குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கிறது. ஒமேகா நீ கொழுப்பு அமிலம் நிறைந்த பாதாம் பருப்பு உடல் வளர்ச்சி துரிதப்படுத்துகிறது.

மக்கானா

மக்கானா என்னும் தாமரை விதை, கால்சியம் அதிகம் கொண்ட உணவாகும். இது குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. வலுவான எலும்புகள் இல்லாமல், அதிக உயரத்தை அடைவது சாத்தியமில்லை.

எள்ளு

எள்ளில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது குழந்தை வளர மிக அதிசயம். மேலும் இதில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. இதனால் எலும்பு வளர்ச்சி துண்டப்படுவதோடு எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உயரமாக வளர எலும்புகள் வலுவாக இருக்க வேண்டும்.

பெருஞ்சீரகம் அல்லது சோம்பு

ஆரோக்கிய நன்மைகள் பல அடங்கிய பெருஞ்சீரகத்தில், கால்சியம் சத்து மட்டுமல்லாமல், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானதாகும்.

உயரத்தை அதிகரிக்க உதவும் பிற உணவுகள்

குழந்தைகளின் உயரம் அதிகரிக்க, அவர்களது உணவில் பால், பழங்கள், பச்சை இலை காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, உலர் பழங்கள் என்ன எல்லா வகையான உணவுகளையும் டயட்டில் சேர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... குறைந்த கலோரி அதிக நார்ச்சத்து மிக்க சில காய்கறிகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News