கல்லீரல் வீக்கம், கொழுப்பு என பிரச்சனைகளுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் சட்னி வகைகள்!

Fatty Liver Remedies : கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு ஏற்படுத்தும் பிரச்சனை, நமது ஆரோக்கியத்தை பாதித்து பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். கல்லீரம் வீக்கம் முதல் கொழுப்பு வரை அனைத்திற்கும் அருமருந்தாய் விளங்கும் உணவுகள்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 28, 2024, 07:17 PM IST
  • கல்லீரல் வீக்கத்தால் பிரச்சனையா?
  • கல்லீரலில் கொழுப்பு படிந்துள்ளதா?
  • அருமருந்தாய் நோய் தீர்க்கும் உணவுகள்...
கல்லீரல் வீக்கம், கொழுப்பு என பிரச்சனைகளுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் சட்னி வகைகள்! title=

கல்லீரலில் கொழுப்பு படிந்தால் ஏற்படும் பிரச்சனையை டிஃப்யூஸ் லிவர் பிரச்சனை (Diffuse liver disease) என்று அழைக்கப்படுகிறது. கல்லீரலைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு சேரத் தொடங்கும் போது ஏற்படும் இந்த பிரச்சனை, உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படுகிறது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை தவிர்க்க, உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

கல்லீரல் கொழுப்பு பிரச்சனை என்பது, வயிற்றில் வீக்கம், வலி ​​என பல சிக்கல்களைக் கொடுக்கும். உணவே மருந்து என்பதும், நமது சமையலறையில் இருக்கும் உணவுப் பொருட்களே அனைத்திற்கும் மருந்தாக மாறும் என்பது இந்த பிரச்சனைக்கும் பொருத்தமானது தான்.

கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை குறைக்க, உங்கள் இரவு உணவில் சில சட்னிகளை சேர்த்து கொள்ளுங்கள். உணவில் இந்த சட்னிகளை சேர்த்துக் கொண்டால் கொழுப்பு கல்லீரல், கல்லீரல் வீக்கம் உட்பட பல பிரச்சனைகள் நீங்கும், ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மஞ்சள் - நெல்லிக்காய் சட்னி
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை குறைக்க, மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் சட்னி சாப்பிடுங்கள். நெல்லிக்காய் மற்றும் சுமார் 1 அங்குல பச்சை மஞ்சள் எடுத்துக் கொண்டு இரண்டையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். ஆனால், இந்த கலவையுடன் சிறிது உப்பு காரம் சேத்துக் கொண்டால் சட்னியாக இட்லி தோசையுடன் சாப்பிடலாம். சுவை சற்று சுமாராகத் தான் இருக்கும். ஆனால் பல மருத்துவ பண்புகள் கொண்ட இந்த நெல்லிக்காய் சட்னி, கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கும்.

மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்தத்திற்கு நிவாரணமாக அமையும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்

முருங்கை இலை சட்னி
கல்லீரலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க முருங்கையிலை சட்னியை சாப்பிடுங்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு போன்ற பண்புகள் கொண்ட இந்த சட்னி, உங்கள் பிரச்சனைகளை குறைக்கும். முருங்கை இலையை வேகவைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அத்துடன் அதனுடன் சிறிது எலுமிச்சை மற்றும் உப்பு காரம் சேர்த்து தாளித்து, அதில் முருங்கை இலை கலவையை சேர்த்து வேகவைத்து உண்ணவும்.
 
கொத்தமல்லி சட்னி
பச்சை கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்த்து அரைத்து சட்னியாக உண்ணவும். இது ஆக்ஸிஜனேற்றத்தின் ஒரு நல்ல மூலமாகும், இது உங்கள் பிரச்சனைகளை குறைக்கும்.

ஆளி விதை சட்னி
ஆளிவிதை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும். இதனை உட்கொள்வதன் மூலம் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கலாம். இதை செய்ய, ஆளிவிதை தூளுடன் சிறிது உப்பு, பச்சை வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.. இந்த சட்னியை இட்லி தோசையுடன் சாப்பிட்டால் கொழுப்புக் கல்லீரல் பிரச்சனை தீரும்.

கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லியில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது உங்கள் கல்லீரலைச் சுற்றி படிந்திருக்கும் கொழுப்பைக் குறைக்கும்.பச்சை கொத்தமல்லி எடுத்துக் கொள்ளவும். அதில் 2 தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து பயன்படுத்தவும். இது மிகவும் சுவையாக இருக்கும். இந்த சட்னியும் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்க உதவும்.

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆரோக்கியத்தைத் தரும் பாகற்காயை எப்படி பயன்படுத்தினால் யூரிக் அமிலம் குறையும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News