சில தினங்களுக்கு முன் மனித ரத்தத்தில் சில மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டு வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் மனித நுரையீரலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ், பிளாச்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
ஹல் பல்கலைக்கழகம் மற்றும் ஹல் யோர்க் மருத்துவப் பள்ளியின் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் நுரையீரலின் ஆழமான பகுதியில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. காற்றுப்பாதைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் இது சாத்தியமற்றது என்றே முன்பு கருதப்பட்ட நிலையில், இந்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! மனித ரத்தத்தில் கலக்கும் பிளாஸ்டிக்!
நுரையீரலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உள்ளது தொடர்பான ஆய்வில், அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட 13 நோயாளிகளிடமிருந்து அகற்றப்பட்ட திசுக்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 11 பேரின் நுரையீரல்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் பொதுவாகக் காணப்படும் துகள்கள் பாலிப்ரொப்பிலீன் ஆகும். இது பிளாஸ்டிக் பேக்கேஜிங், PET பாட்டில்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"நுரையீரலின் கீழ் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான துகள்கள் இருக்ககூடும் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நுரையீரலின் கீழ் பகுதிகளில் காற்றுப்பாதைகள் சிறியதாக இருப்பதால், எவ்வாறு பிளாஸ்டிக் துகள்கள் சென்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது" என்று ஆய்வை மேற்கொண்ட மூத்த ஆசிரியரும் இங்கிலாந்தில் உள்ள ஹல் யார்க் மருத்துவப் பள்ளியின் லாரா சடோஃப்ஸ்கி, தி கார்டியன் பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.
"நாம் கண்டறிந்த மைக்ரோபிளாஸ்டிக் வகைகளின் தன்மை மற்றும் அளவுகள், அதனால் ஆரோக்கியத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து மேலும் ஆய்வுக்கு பிறகே தெரிவிக்க முடியும்" என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த ஆராய்ச்சி தகவல்களை ‘சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்ட்’ இதழில்ல் வெளியிடுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க |நிம்மதியான தூக்கம் வேண்டுமா; டின்னரில் ‘இவற்றை’ சேர்த்துக் கொள்ளுங்கள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR