உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருந்தால் தான் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மறக்கக்கூடாது. அளவிற்கு அதிகமான தண்ணீர் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதற்கு பதிலாக, பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீரை சரியான நேரத்தில் சரியான அளவில், குடித்தால் தான் அதன் முழு பலனை பெற முடியும்.
வாட்டர் டாக்ஸிட்டி (Water Toxity) எனப்படும் உடல்நல பிரச்சனை
அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்பை, வாட்டர் பாய்ஸனிங் என கூறுவார்கள். அதாவது தண்ணீரே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷம் ஆகிவிடும். அதனால் வாட்டர் டாக்ஸிட்டி எனப்படும் உடல்நல பிரச்சனை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அளவிற்கு அதிகமான தண்ணீர், சிறுநீரகங்களில் கூட பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரகத்துக்கு, வேலைப்பளு அதிகமாகி பலவீனமடையும் வாய்ப்பு உள்ளது. அதோடு, அளவிற்கு அதிகமான தண்ணீரால் உடலில் உள்ள சோடியம் அளவு, மற்றும் எலக்ட்ரோலைட் அளவு பாதிக்கப்பட்டு, சம நிலையில் இல்லாமல் இருந்தால், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம் உண்டு.
தண்ணீரைக் குடிக்கும் சரியான முறை
தண்ணீரை, சரியான இடைவெளியில் குடிக்க வேண்டும். சிலர் நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்துவிட்டு, திடீரென்று ஒரே நேரத்தில் நிறைய தண்ணீர் குடிப்பார்கள். இது சிறுநீரகத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் மற்றும் இதய செயல்பாடிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
சாப்பிட்டவுடன் தண்ணீர் அருந்தலாமா
நம்மில் பலருக்கு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். சாப்பிட்ட பின் அதிகம் தண்ணீர் குடிப்பதால், செரிமான முறை பாதிக்கப்பட்டு, சிறுநீருடன் அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள் வெளியேறும் வாய்ப்பு உள்ளதாக, உணவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | அடிவயிற்று தொப்பையை குறைக்கணுமா? இரவில் இவற்றை மறக்காம சாப்பிடுங்க!
உடற்பயிற்சிக்குப் பிறகு அதிக தண்ணீர் குடிக்கலாமா
உடற்பயிற்சிக்கு பிறகு தாகம் எடுப்பது, பொதுவான விஷயம். ஆனால் அதற்காக நிறைய தண்ணீர் குடிப்பது தவறு என்கின்றனர். காரணம், உடற்பயிற்சியின் போது வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நமக்கு தாகம் ஏற்படுகிறது. அதற்காக ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பது, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். சளி இருமல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அளவோடு தண்ணீர் குடிப்பது நல்லது.
சிறுநீரின் நிறமும் தண்ணீர் அளவும்
நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு, சரியா தவறா என்பதை நமது சிறுநீரின் நிறத்தை வைத்து கண்டறியலாம். சிறுநீரின் நிறம் முற்றிலும் வெண்ணிறமாக இருந்தால், நாம் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம். சிறுநீரின் நிறம், வெளிர்மஞ்சளாக இருந்தால் நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம். அதே சமயம் சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். பொதுவாக சுகாதார நிபுணர்கள் நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது சரியான அளவு என்று கருதுகின்றனர். இதை போதுமான இடைவெளியில் அவ்வப்போது அருந்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | தொப்பை அதிக தொந்தரவு செய்கிறதா? இரவு தூங்கும் முன் இவற்றை குடியுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ