அசிடிட்டி, நெஞ்செரிச்சல் பிரச்சனையை தீர்க்கும்... சூப்பர் வீட்டு வைத்தியங்கள்!

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கக் கோளாறுகள் காரணமாக, செரிமானம் சரியாக இல்லாமல் வயிற்றில் வாயுக்கள் அதாவது அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால், அஜீரணக் கோளாறு  புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, வயிறு உப்பசம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 16, 2024, 09:20 PM IST
  • சிலருக்கு அசிடிட்டி பிரச்சனை தினசரி பிரச்சனையாக இருக்கும்.
  • அசிடிட்டி பிரச்சினையை ஒரு நொடியில் தீர்க்கும் சில வீட்டு வைத்தியங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • மருந்துகள் மூலம் சரி செய்வதை காட்டிலும் உணவுகளின் மூலமாகவும் இயற்கையான முறையிலும் சரிசெய்வதே நல்லது.
அசிடிட்டி, நெஞ்செரிச்சல் பிரச்சனையை தீர்க்கும்... சூப்பர் வீட்டு வைத்தியங்கள்! title=

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கக் கோளாறுகள் காரணமாக, செரிமானம் சரியாக இல்லாமல் வயிற்றில் வாயுக்கள் அதாவது அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால், அஜீரணக் கோளாறு  புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, வயிறு உப்பசம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். இவற்றை மருந்துகள் மூலம் சரி செய்வதை காட்டிலும் உணவுகளின் மூலமாகவும் இயற்கையான முறையிலும் சரிசெய்வதே நல்லது. ஏனெனில் இதற்கு பக்க விளைவுகள் இருக்காது.

அசிடிட்டி சிலருக்கு எப்போதாவது வரும் ஆனால் சிலருக்கு இந்தப் பிரச்சனை தினசரி பிரச்சனையாக இருக்கும். அசிடிட்டி பிரச்சினையை ஒரு நொடியில் தீர்க்கும் சில வீட்டு வைத்தியங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். 

சீரகம் (Cumin For Acidity)

சீரகம் அசிடிட்டியைக் குறைக்க உதவும் சிறந்த மசாலா. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமானத்தை சீராக்குகிறது. நீங்கள் அமிலத்தன்மையை உணர்ந்தால், சிறிது சீரகத்தை எடுத்து நன்றாக மென்று சாப்பிடுங்கள். இது உங்களுக்கு நிவாரணத்தைத் தரும். இது தவிர இதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்கலாம்.

இஞ்சி (Ginger For Acidity)

உங்களுக்கு அதிக அமிலத்தன்மை பிரச்சனை இருந்தால், மூலிகை தேநீர் குடிப்பதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இஞ்சி மற்றும் புதினா நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெருஞ்சீரகம் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவையும் அமிலத்தன்மையைப் போக்க உதவுவதாகக் கருதப்படுகிறது.

துளசி (Tulsi For Acidity)

மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள துளசி இலை அமிலத்தன்மை பிரச்சனையையும் நீக்குகிறது.  தினமும் ஐந்து முதல் ஆறு துளசி இலைகளை சாப்பிடுங்கள். அல்லது துளசி டீ அருந்தலாம். இது உங்கள் அமிலத்தன்மை பிரச்சனையை தீர்க்கும்.

மேலும் படிக்க | இரவில் கால் பிடிப்பு பிரச்சனையா? இந்த வைட்டமின் குறைபாடுதான் காரணம்!!

வெல்லம் (Jaggery For Acidity)

செரிமானம், அசிடிட்டி தொடர்பான பிரச்சனைகளுக்கு வெல்லம் நல்ல தீர்வை தரும். வயிற்றில் உஷ்ணம் அல்லது வேறு பிரச்சனை காரணமாக ஆசிடிட்டி ஏற்பட்டிருந்தால், ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். வெல்லம் சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் நீர் குடிக்கவும். இதனால் வயிற்றுக்கு உடனடி குளிர்ச்சி கிடைப்பதுடன் அசிடிட்டி பிரச்சனையும் நீங்கும்.

மோர் (Buttermilk For Acidity)
அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, மோர் அருந்தலாம். மோர் வயிற்றை குளிர்விப்பதுடன் நெஞ்செரிச்சலையும் குறைக்கிறது. ஒரு கிளாஸ் மோரில், வறுத்து பொடித்த சீரகப் பொடி, புதினா மற்றும் சிறிது கருப்பு உப்பு சேர்த்து குடிக்கவும்.

நெல்லிக்காய் (Amla For Acidity)

ஆம்லா என அழைக்கப்படும் நெல்லிக்காய், ஆயிர்வேதத்தில் கிட்டதட்ட 100 நோய்களுக்கு மருந்தாக பயான்படுத்தப்படுகிறது. அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட, நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம். நெல்லிக்காயில் கருப்பு உப்பை தடவி சாப்பிட்டாலும், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பழம் (Banana For Acidity)

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சினை உள்ளவர்கள் நன்கு பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுவது பலன் தரும். வாழைப்பழத்தில் அமிலத்தன்மை மிகக் குறைவு. அதோடு வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான பொட்டாசியமும் நார்ச்சத்துக்களும் வயிற்றில் அதிகப்படியான அமிலங்கள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எச்சரிக்கை! நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும் ‘சில’ பழக்கங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News