தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘சூப்பர்’ பானங்கள்!

Weight Loss Drinks: வீட்டில் தயாரிக்கப்பட்ட சில பானங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 1, 2023, 02:22 PM IST
தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘சூப்பர்’ பானங்கள்! title=

Homemade Drinks For Weight Loss: உடல் பருமன் என்பது இன்றைய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும்.  உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணம் நமது மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம். நம்மில் பெரும்பாலோர் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா என அதிக எடையைக் குறைக்க பல வழிகளைக் கடைப்பிடிக்கிறோம். ஆனால் உணவுப் பிரியர்களுக்கு டயட்டில் இருப்பது என்பது சற்று கடினமான பணியாக இருக்கும். எனவே நீங்களும் ஒரு உணவுப் பிரியராக இருந்து, உங்கள் உடல் பருமனை வேகமாக குறைக்க விரும்பினால், உங்களுக்கு உதவும் வகையில் சில வெயிட் லாஸ் டிரிங்குகள் பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம்.  உடல் எடையை வேகமாக குறைக்க, இந்த பானங்களை தினமும் உட்கொள்ளவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

எடையைக் குறைக்க உதவும் சில பானங்கள்:

1) கிரீன் டீ:

உடல் பருமனை குறைக்க கிரீன் டீயுடன் உங்கள் நாளைத் தொடங்கலாம். ஏனெனில் கிரீன் டீ உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையைக் குறைக்க உதவும். கிரீன் டீ மிகவும் சுவையுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். கிரீன் டீயில் தயனைன் உள்ளது. இந்த அமினோ அமிலம், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டி-பாடிகளை வழங்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும்.

2) ஆப்பிள் சைடர் வினிகர்:

தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க திட்டமிட்டு உள்ளவர்களுக்கு ஆப்பிள் சிடார் வினிகர் சிறந்த தீர்வாக உள்ளது. ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆப்பிள் சிடார் வினிகர், நமது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை ஒழுங்குபடுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆப்பிள் சைடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் அல்லது சாறில் கலந்து சாப்பிடலாம். இது மட்டுமின்றி, இதனை உட்கொள்வது வயிற்று வாயு மற்றும் எரியும் உணர்விலிருந்து நிவாரணம் அளிக்கும்.  ஆப்பிள் பழங்களை நன்றாக மசித்து, அதை ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியங்களின் உதவியினால், அதை நொதிக்க செய்து ஆப்பிள் சிடார் வினிகர் தயாரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | சட்டுபுட்டுன்னு சக்கரையைக் குறைக்கும் பழம்! தாட்பூட் பழத்தின் மருத்துவ குணங்கள்

3) இஞ்சி தண்ணீர்:

இஞ்சி சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உங்கள் அதிகரித்த எடையை குறைக்க விரும்பினால், காலையில் இஞ்சி தண்ணீரை உட்கொள்ளலாம். பொட்டாசியம் ஃபோலேட், ஜிங்க் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பண்புகள் இஞ்சியில் உள்ளன. உணவிற்கு முன் இஞ்சித் துண்டுகளுடன் உப்பு சேர்த்து சாப்பிடும்போது உமிழ் நீர் சுரப்பு அதிகரிக்கப்பட்டு ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன. இஞ்சி பானம்  குடிப்பதன் மூலம் வாயுத் தொந்தரவுகள் குறைகிறது.  வயிற்று பிரச்சனைகள் இல்லாமல் இருந்து, ஜீரணம் சிறப்பாக இருந்தால் தான் உடல் எடை குறையும்

4) வெதுவெதுப்பான நீர்:

வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதன் மூலம் எடையை எளிதில் குறைக்கலாம். வெதுவெதுப்பான நீரில் அன்றைய தினத்தைத் தொடங்கினால், உடலில் சேரும் கொழுப்பைக் குறைத்து எடையைக் குறைக்கலாம். தூங்கி எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால், உடல் நச்சுக்கள் அனைத்தும் நீங்கி, மல சிக்கல் நீங்கும்.  இது மிகவும் சிறந்த உடை இழப்பு பானம் ஆகும்.

5) சீரக நீர்

சீரக நீர் ஒரு பிரபலமான எடை இழப்பு அல்லது நச்சு நீக்கும் பானம். சீரகம் எடை இழப்பை விரைவுபடுத்தும். சீரக நீர் என்னும் இந்த ஸ்பெஷல் பானத்தை குடிப்பதன் மூலம், நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்கலாம். சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு குணங்கள் காரணமாக, சீரகம் எடையை குறைக்க உதவும். மேலும் தினமும் காலையில் இதனை அருந்துவதன் மூலம், வளர்சிதை மாற்றம் தீவிரமடைகிறது. 

(பொறுப்பு துறப்பு: ஆலோசனை உள்ளிட்ட இந்த உள்ளடக்கம் பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் தகுதியான மருத்துவக் ஆலோசனைக்கு மாற்றானது இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். இந்தத் தகவலுக்கு ZEE NEWS பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | ஒரே நாள்ல ஹார்ட் அட்டாக் வராது! உயிருக்கே உலை வைக்கும் இந்த அறிகுறிகள் இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News