யூரிக் அமிலத்தைக் குறைக்கும் இயற்கை வீட்டு வைத்தியம்

Uric Acid Home Remedies: இன்று உங்களுக்காக யூரிக் அமிலத்தை குறைக்க சில வீட்டு வைத்தியங்களை கொண்டு வந்துள்ளோம், இதன் மூலம் யூரிக் அமிலத்தை குறைக்கும் வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 8, 2023, 04:19 PM IST
  • யூரிக் அமிலம் அதிகரித்து வருவதை எவ்வாறு தெரிந்துகொள்வது?
  • சிலருக்கு யூரிக் அமிலம் அதிகமாக உருவாவது தெரிவதில்லை.
  • எந்த அளவை தாண்டினால் ஆபத்து.
யூரிக் அமிலத்தைக் குறைக்கும் இயற்கை வீட்டு வைத்தியம் title=

அதிக யூரிக் அமிலம் உங்கள் உடலில் கீல்வாதம், சிறுநீரகம் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தவிர, கால்களில் வீக்கம் அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், சமையலறையில் இருக்கும் சில மசாலா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

யூரிக் அமிலம் அறிகுறிகள்
யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, ​​அதன் அறிகுறிகள் உடலில் தெரிய ஆரம்பிக்கும். யூரிக் அமிலம் அதிகரிப்பதால், கால்விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி, உட்கார்ந்திருக்கும் போது மூட்டுகளில் வலி, மூட்டுகளில் கட்டிகள் ஆகிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும். கால் விரலில் முறுக்கு வலி ஏற்படக்கூடும்.

மேலும் படிக்க | வசீகரிக்கும் உதடுகளை கொடுக்கும் ஏலக்காய்! அற்புதமான மருத்துவ பலன்கள்

யூரிக் அமிலத்தின் சாதாரண வரம்பு என்ன?
யூரிக் அமில அளவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் அவ்வப்போது பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பெண்களுக்கான சாதாரண வரம்பு 1.5 முதல் 6.0 mgdl ஆகும். ஆண்களுக்கு இது 2.5 முதல் 7.0 mgdl வரை இருக்கலாம். அதேபோல் அதிகரித்த யூரிக் அமிலத்தின் ஸ்டீக்கை பரிசோனை மூலம் கண்டறியலாம்.

Uric Acid: எந்த அளவை தாண்டினால் ஆபத்து? அதிகரித்தால் குறைப்பது எப்படி?

யூரிக் அமிலத்தை குறைக்கும் (Uric Acid Home Remedies) வீட்டு வைத்தியம்

* மஞ்சளானது ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் எளிதில் கிடைக்கும் ஒரு மூலிகையாகும். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன, இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனுடன் மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற தனிமம் உடலின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதனால் தான் மஞ்சள் பால் உடலில் உள்ள யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது.

* தினமும் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சு மற்றும் யூரிக் அமிலம் வடிகட்டப்படுகிறது. 
அத்தகைய சூழ்நிலையில், இனிப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களை உட்கொள்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

* கிரீன் டீ உட்கொள்வது உங்கள் உடலில் யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது. 

* யூரிக் அமிலத்தை குறைக்க, பச்சை காய்கறிகள், பீன்ஸ், பருப்பு, பிண்டோ பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

* ஓட்ஸ், ஆப்பிள் மற்றும் கொய்யா போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகின்றன.

* யூரிக் அமிலத்தைக் குறைக்க, வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பெர்ரி போன்றவற்றையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மாட்டிறைச்சி சாப்பிடுவது உடலுக்கு கெட்டதா... சர்ச்சையை விட சத்து ஜாஸ்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News