யூரிக் அமிலம் என்பது உடலில் உற்பத்தியாகும் ஒரு நச்சு ஆகும். இது அனைவரின் உடலிலும் உருவாகிறது. சிறுநீரகங்கள் அதை வடிகட்டி உடலில் இருந்து எளிதாக அகற்றும். மட்டன் கல்லீரல், சிறிய கடல் மீன், உலர் பீன்ஸ், பீர் மற்றும் ஆல்கஹால் போன்ற பியூரின்கள் நிறைந்த சில உணவுகளை உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். யூரிக் அமிலம் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது சிறுநீரக நோய், கீல்வாதம், மூட்டு வலிக்கு போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, அதன் அறிகுறிகள் உடலில் தெரிய ஆரம்பிக்கும். யூரிக் அமிலம் அதிகரிப்பதால், கால்விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி, உட்கார்ந்திருக்கும் போது மூட்டுகளில் வலி, மூட்டுகளில் கட்டிகள் ஆகிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும். கால் விரலில் முறுக்கு வலி ஏற்படக்கூடும்.
யூரிக் அமிலம் அதிகரித்து வருவதை எவ்வாறு தெரிந்துகொள்வது? சிலருக்கு யூரிக் அமிலம் உடலில் அளவுக்கு அதிகமாக உருவாவது தெரிவதில்லை. யூரிக் அமிலத்தின் அளவைக் கண்டறிய, உடலில் அதன் வீச்சை அறிந்து கொள்வது அவசியமாகும். யூரிக் அமிலத்தின் சாதாரண வரம்பு என்ன மற்றும் அது எந்த அளவை மீறினால் ஆபத்து என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | Uric Acid அதிகரிப்பதால் அவதியா? இந்த வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்
யூரிக் அமிலத்தின் சாதாரண வரம்பு என்ன?
யூரிக் அமில அளவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் அவ்வப்போது பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பெண்களுக்கான சாதாரண வரம்பு 1.5 முதல் 6.0 mgdl ஆகும். ஆண்களுக்கு இது 2.5 முதல் 7.0 mgdl வரை இருக்கலாம். யூரிக் அமிலத்தின் வீச்சு அதிகமாக இருக்கும்போது, அது மூட்டுகளில் படிகங்கள் வடிவில் குவிந்து கீல்வாதத்தை ஏற்படுத்துகிறது.
அதிகரித்த யூரிக் அமிலத்தின் ஸ்டீக்கை பரிசோனை மூலம் கண்டறியலாம். அளவீடு மூலம், உங்கள் உடலில் யூரிக் அமிலம் இயல்பாக உள்ளதா அல்லது எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டதா என்பதை அறியலாம். யூரிக் அமில இரத்த பரிசோதனை சீரம் யூரிக் அமில சோதனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சோதனையின் மூலம், இரத்தத்தில் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்படுகிறது.
யூரிக் அமிலத்தின் எந்த அளவு ஆபத்தானது
சில நோய்கள் மற்றும் சில பியூரின் நிறைந்த உணவுகள் யூரிக் அமிலத்தின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம். யூரிக் அமில அளவு 9.5 mg/dL ஐ அடையும் போது, அது உடலுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்.
யூரிக் அமிலம் எல்லைக் கோட்டிற்குச் சென்றால், அதை பின்வருமாறு கட்டுப்படுத்தலாம்:
- யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- உணவில் பியூரின் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
- மது மற்றும் பீர் அருந்துவதைத் தவிர்க்கவும்.
- காபி மற்றும் தேநீர் சிரமத்தை அதிகரிக்கும், அவற்றிலிருந்து விலகி இருங்கள்.
- யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த தினமும் வால்நட் (வாதுமைக்கொட்டை) சாப்பிடலாம்.
- காலையில் வெறும் வயிற்றில் ஓமத் தண்ணீரைக் குடித்தால், யூரிக் அமிலம் விரைவில் குறையும்.
(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தணுமா: இந்த 4 பழங்கள் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ