கோடை கால நோய்கள் வராமல் தடுக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!

Tips to Prevent Summer Diseases: வெயில் காலத்தில் சாதாரண வியர்குரு முதல் அம்மை வரை பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.  எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2024, 09:52 PM IST
  • கோடைகால நோய்களிலிருந்து தப்பிக்க உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டியவை.
  • வெயில் காலத்தில் சாதாரண வியர்குரு முதல் அம்மை வரை பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
  • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கோடை கால நோய்கள் வராமல் தடுக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..! title=

Tips to Prevent Summer Diseases: தமிழகத்தில், கோடை காலம் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மே மாதங்கள் வரை நீடிக்கும். மார்ச் இன்னும் பிறக்காத போதும், தற்போது வெயிலின் தாக்கம் பல இடங்களில் அதிகரிக்க தொடங்கி விட்டது. வெயில் காலத்தில் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கோடைகால நோய்கள்

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, வயிற்றுப்போக்கு தலைவலி போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும். அதோடு சின்னம்மை போன்ற வெயில் கால நோய்களும் தாக்கும். உடலில் நீர்ச்சத்து குறைவதால், நீர் கடுப்பு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அது தவிர, வியர்வை அதிகமாக இருக்கும் போது வியர்க்குரு போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும்.

கோடைகால நோய்களிலிருந்து தப்பிக்க உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டியவை

வெள்ளரிக்காய்

சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளரிக்காய், 95% நீர்ச்சத்து நிறைந்த காய். இது உடலில் உள்ள நீர்ச்சத்து மற்றும் ஏலக்கரோ லைட்டுகளின் அளவை சீராக பராமரிக்கிறது. வெள்ளரிக்காயை தினமும் சேர்த்துக் கொள்பவர்களுக்கு நீர் சத்து பற்றாக்குறை ஏற்படாது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் வெள்ளரிக்காய் கோடைகால நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும் அருமருந்து. உங்களுக்கு விரும்பிய வகையில் வெள்ளரிக்காய் சாலட் ஆகவும், வெள்ளரி பச்சடியாகவும் சாப்பிடலாம். வெள்ளரி ஜூஸும் உடலுக்கு நல்லது. ஆனால் முழுமையாக சாப்பிடும் போது அதில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு கிடைப்பதால் செரிமான பிரச்சனைகளும் இருக்காது.

தயிர்

கோடை கால நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க தினமும் தயிர் சாப்பிடுவது சிறந்த வழி. குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் தயிர், செரிமானத்தை வலுப்படுத்தும். அமிலத்தன்னை நெஞ்சு எரிச்சல் போன்றவற்றையும் தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய தயிரை, உங்களுக்கு பிடித்த வகையில் நீர்மோராகவும், தயிர்சாதமாகவும், பச்சடி வகைகளாகவும் செய்து சாப்பிடலாம்.

இளநீர்

வெயில் காலத்தில் தவிர்க்க கூடாத மற்றொரு பானம் இளநீர். இதில் உள்ள தாது சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றனர். வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் சத்துக்கள், உடலில் இருந்து வியர்வை சிறுநீர் மூலம் அதிகம் வெளியேறிவிடும். அவற்றை சீர் செய்ய இளநீர் உதவும். உடலுக்கு தேவையான பொட்டாசியம் சோடியம், கால்சியம் போன்றவை இதிலிருந்து தாராளமாக உடலுக்கு கிடைத்து விடும். இளநீரை தாராளமாக தினமும் அருந்தலாம். நீரிழிவு நோயாளிகள் கூட இதனை தாராளமாக உண்ணலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

மேலும் படிக்க | அடிமுட்டாள்களும் அறிவாளியாக மாறலாம்! ‘இதை’ செய்தால் போதும்..!

தர்பூசணி

நீர்ச்சத்து மிக்க பழமான தர்பூசணி பழத்தை வெயில் காலத்தில் தவிர்க்கவே கூடாது. நீர் சத்துடன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை ஏராளமாக நிறைந்திருக்கும். உடலுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் தர்பூசணியை தவறாமல் சேர்த்துக் கொள்வதால் கோடைகால நோய்களிலிருந்து தப்பிக்கலாம். தர்பூசணியை தவிர, ஆரஞ்சு சாத்துக்குடி, திராட்சை, கிர்ணி போன்ற நீர் சத்து மிக்க பழங்களும் பழச்சாறுகளும், உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

தண்ணீர்

கோடை காலத்தில் தண்ணீர் தாராளமாக அருந்த வேண்டும். ஆனால் வெயிலில் வெளியில் சென்று வந்தவுடன் குளிர்ந்த தண்ணீரை குடிக்கவே கூடாது. அந்த நேரத்தில், அரை வெப்ப நிலையில் உள்ள நீரை மட்டுமே அருந்த வேண்டும்.

மேலும் படிக்க | வயதான தோற்றத்தை தாமதப்படுத்த இந்த 5 ஆயுர்வேத வைத்தியங்கள் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News