Thyroid & Heart: இதயத்தை பலவீனமாக்கி செயலிழக்கச் செய்யும் தைராய்டு! பாதுகாக்க டிப்ஸ்

Thyroid Control: தைராய்டை கட்டுப்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்... சுறுசுறுப்பாக இருப்பதும் சோம்பலைத் தவிர்ப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதை புரிந்துக் கொண்டால், ஆரோக்கியம் உங்கள் கையில்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 21, 2022, 05:45 PM IST
  • தைராய்டில் இருந்து பாதுகாக்க டிப்ஸ்
  • இதயத்தை பலமாக்கும் குறிப்புகள்
  • ஹார்மோன்களை சீராக்கும் வழிகள்
Thyroid & Heart: இதயத்தை பலவீனமாக்கி செயலிழக்கச் செய்யும் தைராய்டு! பாதுகாக்க டிப்ஸ் title=

மக்களிடையே அதிகரித்து வரும் ஆரோக்கியப் பிரச்சனைகளில் தைராய்டு பிரச்சனைகள் அதிக கவலை அளிக்கின்றன. இது, இதயத்தை மட்டுமல்ல, அனைவரின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கின்றன. தைராய்டு சுரப்பு வழக்கத்தைக் காட்டிலும் மாறுபடுவதால் இதயம் பாதிக்கப்படுகிறது. தைராய்டு சுரப்பின் மாறுபாட்டுக்கும், இதய பாதிப்புகளுக்கும் என்ன தொடர்பு? இந்த தைராய்டு அளவு மாறுவதை எப்படி தடுக்கலாம் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.  

தைராய்டு என்பது, நமது உடலின் பல அத்தியாவசிய செயல்முறைகளுக்கு அடிப்படையானது. தைராய்டு சுரப்பி என்பது, நமது தொண்டையின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சிறிய சுரப்பி ஆகும். தைராய்டு சுரப்பி செயலிழந்தாலும், அல்லது அதன் சுரப்பு அளவில் மாறுதல்கள் ஏற்பட்டாலும், அது ஆரோக்கியத்தில் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்துகிறது.

ஒருவரின் உடலில் தைராய்டு மிகக் குறைவாக சுரந்தால், அது ஹைப்போ தைராய்டிசம் என்றும், அதிகமாக சுரந்தால், அது ஹைப்பர் தைராய்டிசம் என்றும் அழைக்கப்படுகிரது. இந்த தைராய்டு பிரச்சனைகள்,  ஒருவரின் ஹார்மோனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும்.  

மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

தைராய்டு சுரப்பி, உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது, இதில் உடல் எவ்வளவு ஆக்ஸிஜன் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்பதை நிர்ணயிக்கும் செயல்முறை முக்கியமானது. அதைத்தவிர, நமது உடலின் செரிமான செயல்முறை, தசை செயல்பாடு மற்றும் சருமத்தின் ஆரோக்கியம் என்பதற்கும் தைராய்டு காரணமாகிறது.  

இதயம் உட்பட உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் தைராய்டு, குறிப்பிடத்தக்க விளைவுகளைக் கொண்டிருக்கிறது. அதிகப்படியான தைராய்டு இதயத்தை பல வழிகளில் பாதிக்கும் என்பதால், கவனமாக இருப்பது நல்லது.

உங்கள் உடலில் இந்த மாறுதல்களோ அல்லது அறிகுறிகளோ இருந்தால், அதை உடனடியாக தீர்க்கலாம். ஏனெனில், இவை தீவிரமான இதய பிரச்சனைகளைக் கொடுக்கக்கூடியவை ஆகும்.
உடனடியாக மருத்துவரை அணுகி,தேவையான ஆலோசனையையும் சிகிச்சையையும் பெறவும்.

மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்! ஜாக்கிரதை!

இதயத் துடிப்பு அதிகரிப்பு
தைராய்டு அதிகமாக சுரப்பதால், இதயத் துடிப்பு துரிதம் ஆகும், ஏனெனில் அதிகப்படியான தைராய்டு உங்கள் இதயத் துடிப்பின் விகிதத்தை துரிதப்படுத்துகிறது. பொதுவாக, உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், மன அழுத்தத்தில் இருக்கும்போதும், ஹைப்பர் தைராய்டிசம் என்னும் அதிகமாக தைராய்டு சுரக்கும் நிலை ஏற்படும்.  

சீரற்ற இதயத் துடிப்பு
ஹைப்பர் தைராய்டிசத்தின் விளைவாக ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஏற்படலாம். வழக்கமாக இதயம் துடிக்கும் அளவில் இருந்து சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டால், அதைப் பற்றி பெரும்பாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், தொடர்ந்து இதயத் துடிப்பு அசாதாரண அளவில் அதிகரிப்பது, பக்கவாதம் பாதிக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

'கார்டியாக் அரித்மியாஸ்' என்றும் அழைக்கப்படும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் என்பது, ஒருவரின் இதயத்தின் மேல் அறைகள் ஒழுங்கற்றதாக இருக்கும்போது "ஒத்திசைவு இல்லாமல்" துடிக்கும் போது நிகழ்கிறது.

மார்பு வலி
உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் உள்ள பலருக்கு இதய பாதிப்புகளுக்கான அபாயம் அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தமனிகள் சுருங்குவது, மார்பு வலி என பலவிதமான இதய நோய்களை ஏற்படுத்தலாம்.

இதயத்தின் மீதான கூடுதல் அழுத்தங்கள் அனைத்தும் கார்டியாக் ஹைபர்டிராபியை ஏற்படுத்தும், இது இறுதியில் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது, இதனால், இதயம் பெரிதாகி, இதயச் சுவர்களை அடர்த்தியாகிவிடும்.  

மேலும் படிக்க | உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கலாம்! அதற்காக அதிக உப்பு உண்ணவேண்டாம்! உப்பின் ஆபத்து

இதய செயலிழப்பு
இதய செயலிழப்பு சில நேரங்களில் ஹைப்பர் தைராய்டிசத்தால் தானே ஏற்படலாம். மறுபுறம், ஏற்கனவே இருக்கும் இதய நோயுடன், ஹைப்பர் தைராய்டிசமும் சேர்ந்துக் கொண்டால், இதயம் செயல் இழப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இது ஒருவரின் உயிருக்கே உலை வைக்கலாம்.  

இதயத்தை பாதுகாக்க சில உதவிக்குறிப்புகள்

புகையிலை பயன்பாடு, சிகரெட் புகைப்பதை நிறுத்தவும்
உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும்
ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கைமுறை
மது பயன்பாட்டை குறைக்கவும் 

சுறுசுறுப்பாக இருப்பதும் சோம்பலைத் தவிர்ப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதை புரிந்துக் கொண்டால், ஆரோக்கியம் உங்கள் கையில்...

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News