உங்கள் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதா? பலவீனமான இதய அறிகுறிகள்

உங்கள் இதயம் நல்ல நிலையில் உள்ளதா அல்லது பலவீனமாக உள்ளதா? இதயம் பலவீனமாக உள்ளதா என்பதைக் காட்டும் சில பொதுவான அறிகுறிகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 21, 2022, 04:18 PM IST
  • இதயம் பலவீனத்தைக் காட்டும் சில பொதுவான அறிகுறிகள்
  • உங்கள் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதா?
  • பலவீனமான இதய அறிகுறிகள்
உங்கள் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதா? பலவீனமான இதய அறிகுறிகள் title=

நியூடெல்லி: உங்கள் இதயம் நல்ல நிலையில் உள்ளதா அல்லது பலவீனமாக உள்ளதா? இதயம் பலவீனமாக உள்ளதா என்பதைக் காட்டும் சில பொதுவான அறிகுறிகள் உலகளவில் இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்று SARS-CoV-2 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் என்று ஆய்வுகள் அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளன. கொரோனா தொற்று, பல வழிகளில் இதயத்தைப் பாதிப்பதாக, கடந்த இரண்டு மாதங்களாக  மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கோவிட்-க்குப் பின் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசும்போது, கொரோனாவினால் இதயத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் மருத்துவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். பலவீனமான இதயத்தின் அறிகுறிகள் என்ன? அதை புரிந்துக் கொண்டால், மாரடைப்பு, பக்கவாதம், இதயத் தடுப்பு என பல்வேறு இதய நோய்களின் தீவிரத்தன்மையிலிருந்து ஒருவர் பாதுகாப்பாக இருக்கலாம்.

பலவீனமான இதயத்தின் அறிகுறிகள்
உங்கள் இதயம் ஆபத்தில் உள்ளதா அல்லது சரியாக வேலை செய்யவில்லையா என்பதை எப்படி அறிவது? பலவீனமான இதயம் பல நாள்பட்ட நோய்களுக்கு காரணமாக உள்ளது. இதயம் சரியாக வேலை செய்யாதபோது உடலில் ஏற்படும் பல்வேறு அறிகுறிகளைப் புரிந்துகொள்வதும், தெரிந்து கொள்வதும் அவசியம். இதயம் பலவீனமாக இருப்பதை காட்டும் பொதுவான அறிகுறிகளில் சில:

மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!

சீரற்ற இதயத்துடிப்பு
இரவில் அதிகம் வியர்ப்பது
மூச்சு விடுவதில் சிரமம்
மார்பில் லேசான மற்றும் மிதமான வலி
பலவீனம் அல்லது சோர்வு
தினசரி செயல்பாடுகளைச் செய்வதில் சிரமம்
தொடர்ந்து இருமல்
கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம்
அடிவயிற்றில் வீக்கம் மற்றும் வலி

மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்! 

ஒருவரின் இதயம் பலவீனமாகும்போது என்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும்?
பலவீனமான இதயம் பல நாள்பட்ட உடல்நலச் சிக்கல்களையும் நோய்களையும் ஏற்படுத்தும். இதயம் பலவீனமடையும் போது என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, இதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும். இதயத்தின் முதன்மைப் பணி இரத்தத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்வது ஆகும். எனவே, இதயம் பலவீனமாக இருக்கும்போது, ​​​​உடலுக்குத் தேவையான அளவு இரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.  

உடலின் பல பாகங்களுக்கும் சீரான இரத்த ஓட்டம் இல்லாவிட்டால்,  நீரிழிவு, கரோனரி இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உட்பட பல கடுமையான விளைவுகள் ஏற்படலாம். இது இதயத்தை கடுமையாக சேதப்படுத்தும் என்பதோடு, இதய செயலிழப்புக்கும் வழிவகுக்கும்.

பலவீனமான இதயத்தை குணப்படுத்த முடியுமா?
இதயத்தின் பலவீனத்தை குணப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சாத்தியமில்லை என்ற பதிலே கிடைக்கிறது. இருந்தாலும், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது, இதயத்தை சரியாக பராமரிக்க தேவையான விஷயங்களை செய்வது என இதய பலவீனத்தை மேலும் அதிகரிக்காமல் இருக்கும் விஷயங்களை பின்பற்ற வேண்டும்.  

மேலும் படிக்க | உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கலாம்! அதற்காக அதிக உப்பு உண்ணவேண்டாம்! உப்பின் ஆபத்து

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள். இதய ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும். இதயத்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க என்ன செய்யலாம்?

ஆழ்ந்த உறக்கம். வால்நட்ஸ், வெண்ணெய், பெர்ரி என்பது போன்ற இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். அதிக எடை இதய நோய்க்கு ஒரு பெரிய காரணியாகும்.

அதோடு, புகைப்பிடிக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். அதேபோல, மது அருந்துவது மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பது இதயத்தை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதற்கான முக்கிய அறிகுறிகள் ஆகும். நீங்கள் இதயத்தை காதலித்தால், அது உங்களை கைவிட்டு விடுமா என்ன? 

(பொறுப்புத்துறப்பு: உங்கள் உணவு மற்றும் தினசரி வழக்கத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்)

மேலும் படிக்க | Health Alert! 'இவற்றை' சாப்பிட்ட பிறகு பால் அருந்தக் கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News