புதுடெல்லி: அதிக உப்பை உண்ணும்போது, நமது மூளை, இதயம், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளை சேதமடையும். அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு, ஒரு கட்டத்தில் சீர் செய்ய முடியாத அளவு மோசமாகிவிடும். அதிக உப்பு உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கார்டியோவாஸ்குலர் ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், குறைந்த உப்பு உணவை சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, அதிக உப்பு உணவை உண்பவர்களுக்கு, மன அழுத்த ஹார்மோன் அளவுகளில் 75 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டதாகக் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வில் பெரும்பாலான மக்கள் தினமும் ஒன்பது கிராம் உப்பை உட்கொள்கின்றனர் (பரிந்துரைக்கப்பட்ட தினசரி சோடியம் உட்கொள்ளல் ஆறு கிராமுக்கு குறைவாக உள்ளது) என்பதும் தெரியவந்துள்ளது. அதிக உப்பை சாப்பிடுவதால், மூளை மட்டுமல்ல, இதயம், இரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற பிற உறுப்புகளும் சீர்குலையும். அதிக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகள் இவை.
மேலும் படிக்க | அளவிற்கு மிஞ்சினால் புரோட்டீனும் ‘விஷமாகி’ விடும்; எச்சரிக்கும் நிபுணர்கள்!
உயர் இரத்த அழுத்தம்
அதிக உப்பு சாப்பிடுவது உங்கள் இரத்த அழுத்தம் அத்கரிக்க காரணம் ஆகலாம். இது இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
எடை அதிகரிப்பு
அதிக உப்பு கொண்ட உணவு எடை அதிகரிப்புடன் தொடர்புள்ளது, ஏனெனில் சோடியம் உங்கள் உடலில் அதிக தண்ணீரைத் தக்கவைக்க காரணமாகிறது. இது, பல ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை
அதிகப்படியான உப்பு உட்கொள்வது தூக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும், முக்கியமாக இரத்த அழுத்தம் அதிகரிப்பு மற்றும் மன அழுத்தம் அதிகமாகும்.
மேலும் படிக்க | ஆரோக்கியமான இதயத்தை வலுவிழக்கச் செய்யும் ‘இந்த செயல்கள்’ அவசியமா?
சிறுநீரக நோய்
அதிகப்படியான சோடியம் இரத்த அழுத்த அளவை அதிகரிக்கிறது, மேலும் இது காலப்போக்கில் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் சிறுநீரக கற்களையும் அதிகரிக்கும்.
ஆஸ்டியோபோரோசிஸ்
அதிகப்படியான சோடியம், சிறுநீரில் கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிப்பதால், அதிக உப்பு நிறைந்த உணவுகளை உண்பவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு ஆளாக நேரிடும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | அதிக தேநீர் அருந்துவது ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கும் தெரியுமா? அச்சமூட்டும் ஆபத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ