)
Vitamin B12 Deficiency Symptoms: நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பல வித வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் வைட்டமின் பி12 மிக முக்கியமானது. வைட்டமின் பி12 கோபாலமின் என்றும் அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும்.
வைட்டமின் பி12
வைட்டமின் பி12 என்பது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி, டிஎன்ஏ தொகுப்பு, நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றிற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்தாக உள்ளது. குறிப்பாக நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு இது மிக அவசியம். மற்ற வைட்டமின்களைப் போலவே, ஆரோக்கியமான உடலுக்கு வைட்டமின் பி 12 மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாக பார்க்கப்படுகின்றது.
வைட்டமின் பி12 குறைபாடு
உடலில் வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்பட்டால், அதனால் பல உடல்நல பிரச்சனகள் ஏற்படக்கூடும். இதனால், நாம் பல வித நோய்களுக்கு ஆளாகலாம். பொதுவாக, வைட்டமின் பி 12 குறைபாடு சைவ உணவு உட்கொள்ளும் நபர்களுக்கு அதிகமாக ஏற்படுகின்றது. ஏனெனில் வைட்டமின் பி 12 முக்கியமாக விலங்கு பொருட்களில் காணப்படுகிறது.
வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், நம் உடல் அதற்கான அறிகுறிகளை காண்பிக்கும். இந்த அறிகுறிகள் பற்றிய முழுமையான புரிதல் இருப்பது மிக நல்லது. வைட்டமின் பி12 குறைபாட்டால் நம் தினசரி நடவடிக்கைகளில், மூளை செயல்பாடு சார்ந்த விஷயங்களில் தென்படும் அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.
- மனதளவில் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும் நிலை வைட்டமின் பி12 குறைப்பாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
- வைட்டமின் பி 12 இன் குறைபாடு இருந்தால், கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
- எந்த வித காரணமும் இல்லாமல் அவ்வப்போது சோர்வான உணர்வு ஏற்பட்டால் அது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
- வைட்டமின் பி 12 குறைபாடு மனநிலையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.
- நரம்பு பலவீனமும் வைட்டமின் பி12 குறைப்பாட்டின் காரணமாக ஏற்படலாம்.
- வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், மூளையில் எப்போதும் சோர்வான உணர்வு இருக்கும்.
- எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலையும் இதன் ஒரு அறிகுறியாகும்.
- நினைவாற்றல் இழப்பு இதற்கான ஒரு முக்கிய அறிகுறியாக உள்ளது.
- கால் மற்றும் கைகளில் கூச்ச உணர்வு
- வாயில் புண்கள்
- பார்வையில் சிரமம், மங்கலான பார்வை
- நடப்பதில் சிரமம்
வைட்டமுன் பி12 நமது உடலில் உருவாகாது. இதை நாம் உட்கொள்ளும் உணவின் மூலம்தான் பெற முடியும்.
வைட்டமின் பி 12 -ஐ உடலில் சேர்க்க, புதிய பழங்கள், பச்சை காய்கறிகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ், மோர், பால், தயிர், முட்டை, பால் பொருட்கள், முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ