தொப்பையை குறைப்பது எப்படி: இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் உணவு முறையைப் பற்றி துளியும் சிந்திப்பதில்லை. துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை கலந்த பானம், மது அருந்துதல் போன்றவற்றை குடிக்கின்றனர், சாப்பிடுகின்றனர். இவை அனைத்தும் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது உயர் ரத்த சர்க்கரை, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல இதய நோய்கள் போன்ற சில தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும் தவறான உணவுப் பழக்கங்களால் உங்கள் தொப்பை கொழுப்பு அதிகரிக்கலாம்.
தொப்பை கொழுப்பு என்பது வயிற்றில் சேரும் கூடுதல் கொழுப்பு. தொப்பை கொழுப்பின் சில பொதுவான காரணங்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது, மோசமான உணவுமுறை, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் மரபியல் போன்றவற்றை இருக்கலாம். அந்த வகையில் இன்று நாங்கள் சில விதிகளை கூற உள்ளோம், அதை பின்பற்றுவதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.
மேலும் படிக்க | பெண்களே 30 வயது கடந்துவிட்டீர்களா? இந்த மருத்துவ பரிசோதனைகள் அவசியம்..!
தொப்பையை குறைக்க இந்த விதிகளை பின்பற்றவும்:
ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து சாப்பிடுங்கள்
உங்கள் உணவில் ஏராளமான காய்கறிகள், முழு தானியங்கள், நல்ல அளவு புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்த்துக் கொள்ளவும்.
துரித உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும்
பதப்படுத்தப்பட்ட உணவு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், சர்க்கரை பானங்கள் மற்றும் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்பு பொருட்களை உட்கொள்வதை தவிர்க்கவும்.
போதுமான அளவு தூக்கம்
இரவில் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்குவதை நோக்கமாகக் கொள்ளுங்கள். தூக்கமின்மை பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சீர்குலைத்து எடை அதிகரிக்கும் அபாயத்தை குறைக்க உதவும்.
மது அருந்துவதை கட்டுப்படுத்துங்கள்
சராசரியாக மதுபானத்தில் ஒரு கிராமுக்கு 4-7 கலோரிகள் உள்ளன. அதே போல ஒரு பீரில் 100 கிராமுக்கு 43 கலோரிகளுக்கு மேல் இருக்கலாம். பதப்படுத்தப்பட்ட பானமான இதில் அதிக சர்க்கரை மற்றும் இரசாயனங்கள் இருப்பதால் கலோரிகள் கிட்டத்தட்ட 295 வரை இருக்கும். நீங்கள் எவ்வளவு பானங்களை அருந்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் உடலில் கலோரி உட்கொள்ளல் இருக்கும். நீங்கள் செலவழிப்பதை விட அதிக கலோரிகள் இருந்தால், மேலும் உடல் எடை அதிகரிக்கும். இதனால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும்.
வழக்கமான உடற்பயிற்சி
குறைந்தபட்சம் 30 நிமிடங்கள், வாரத்தில் ஐந்து நாட்கள் மிதமான மற்றும் தீவிர உடற்பயிற்சி செய்யுங்கள். இதில் விறுவிறுப்பான நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் ஆகியவை அடங்கும்.
அதிகமாக டிவி பார்ப்பது
ஒன்றரை மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பது 3.5 கன சென்டிமீட்டர் கூடுதல் வயிற்றுக் கொழுப்பை ஏற்படுத்தும் என்பதைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடையலாம். உட்கார்ந்தபடியே வேலை செய்யும் வாழ்க்கை முறையும் உடல் எடையை அதிகரிக்கும், சுறுசுறுப்பாக இருங்கள்! உடல் எடையை கட்டுக்குள் வையுங்கள். தொப்பையை வளர்க்காதீர்கள்.
வீட்டு சாப்பாடே சிறந்தது
நீங்கள் அடிக்கடி கடைகளில் சாப்பிடும்போது அந்த உணவில் எவ்வளவு புரதம், நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறதென்று உங்களுக்கு தெரியாது. ஒருவேளை நீங்கள் சாலட் சாப்பிட்டாலும் அதில் கூட ட்ரெஸ்ஸிங்காக சேர்க்கப்படும் ஆயில் உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும். இயற்கையான மற்றும் ஆர்கானிக் உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது தான் சிறந்தது. முடிந்தவரை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இந்த பச்சை நிறப் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ