திடீரென்று அதிகமாக உடல் எடை குறைகிறதா? இந்த நோய்கள் காரணமாக இருக்கலாம், ஜாக்கிரதை!!

Reason Of Sudden Weight Loss: உடல் எடை குறைந்தால் போதும் என அதற்காக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள், அப்படி நடக்கும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள். அதனால் அது ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும் என்பதை அவர்கள் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2022, 02:08 PM IST
  • திடீரென உடல் எடை குறைந்தால், கவனமாக இருக்க வேண்டும்.
  • காரணமின்றி தொடர்ந்து எடை குறைவது சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
  • உடல் எடை குறைந்தால், அதில் அதிக கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.
திடீரென்று அதிகமாக உடல் எடை குறைகிறதா? இந்த நோய்கள் காரணமாக இருக்கலாம், ஜாக்கிரதை!! title=

திடீர் எடை இழப்புக்கான காரணம்: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் எடை அதிகரிப்பு அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. மக்கள் அதிகரிக்கும் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி என ஏராளமான வழிகளில் தங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். எனினும், திடீரென உடல் எடை குறைவது ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

உடல் எடை குறைந்தால் போதும் என அதற்காக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள், அப்படி நடக்கும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள். அதனால் அது ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும் என்பதை அவர்கள் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். திடீரென உடல் எடை குறைந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், காரணமின்றி தொடர்ந்து எடை குறைவது சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என சுகாதார வால்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆகையால், உடல் எடை குறைந்தால், அதில் அதிக கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். 

நீங்கள் தவிர்க்கக்கூடாத, எடை இழப்புக்கான காரணங்கள் பற்றி இங்கே காணலாம். 

நீரிழிவு நோய்

உடலில் சர்க்கரை நோய் பிரச்சனை வந்தால் எடை குறைகிறது. உடலில் சர்க்கரையின் அளவு தேவைக்கு அதிகமாக அதிகரிக்க ஆரம்பித்தால் அது எடையை பாதிக்கிறது. இதில் முதலில் நோயாளியின் எடை கூடி கொழுப்பாக மாறுகிறது. இதையடுத்து சர்க்கரை ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது மீண்டும் எடை குறைய ஆரம்பிக்கிறது.

மேலும் படிக்க | High BP: இரண்டே வாரங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ‘DASH’ டயட்! 

சர்க்கரை ரத்தத்திலேயே இருந்துவிடுவதும், அவை செல்களை அடையாததும்தான் இதற்கு காரணமாகும். இதனால் நோயாளிகள் பலவீனமாகி, மெலிந்து கொண்டே போவார்கள். ஆகையால் திடீரென உடல் எடை அதிகரித்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.

புற்றுநோய்

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. மறுபுறம், புற்றுநோய் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. எனினும், அதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் காண வேண்டியது அவசியம். இந்த அறிகுறிகளில் ஒன்று எடை இழப்பு. 

ஒருவருக்கு புற்றுநோய் வந்தால், அவரது எடை மிக வேகமாகக் குறையத் தொடங்குகிறது. உடல் புற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, ​​உடலின் ஊட்டச்சத்துக்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடத் தொடங்குகின்றன. இதன் காரணமாக எடை இழப்பு ஏற்படுகின்றது.

ஆகையால், உடல் எடை மிக விரைவில் மிக அதிகம் குறைந்தால், கண்டிப்பாக உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லதாகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்கும் முயற்சியில் ‘இந்த’ தவறுகளை ஒரு போதும் செய்யாதீர்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News