Viral Video : சமூக வலைதளங்கள் முழுவதும், பல்வேறு விதமான வீடியோக்கள் தினசரி வைரலாவது வழக்கம். இந்த வீடியோக்களில் சில குழந்தைகள் வீடியோவாக இருக்கும், ஒரு சில மீம்ஸ் வீடியோக்களாக இருக்கும், ஒரு சில சினிமா வீடியோக்களாக இருக்கும், இன்னும் சில வாழ்வில் நடைபெறும் உண்மை சம்பவங்களின் வீடியோவாக இருக்கும். இவற்றில், கடைசியாக இருக்கும் உண்மை சம்பவங்களுக்குதான் வெயிட் ஜாஸ்தி. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் தன்னை காரில் அழைத்து வந்த ஓட்டுநரை தொடர்ந்து கையால் அடித்து வருகிறார். அதற்கு அந்த ஓட்டுநரும் “என்னை தொடாதீர்கள், இதுதான் நீங்கள் இறங்க வேண்டிய இடம்” என்று கூறுகிறார். மேலும், காரை விட்டு வெளியேறுமாறும் அந்த பெண்ணிடம் கூறுகிறார். இதில், ஆரம்பம் முதல் கடைசி வரை அந்த கார் ஓட்டுநர் அவரை “மேடம்” என மரியாதையாகத்தான் அழைக்கிறார். அந்த பெண் அதை மதிக்காமல் அந்த டிரைவரை கத்திக்கொண்டே இருக்கிறார். “இது நான் இறங்க வேண்டிய இடம் இல்லை. ஏன் இவ்வளவு சார்ஜ் செய்கிறாய்..” என்று மரியாதை குறைவாக பேசுகிறார்.
Kalesh b/w a Drunk lady and a Uber Driver over Wrong location in Dubai pic.twitter.com/eINqcm4QfD
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 31, 2024
அந்த பெண், கேப் ஓட்டுநரை அடிக்கும் போதும் கூட அவர் அப்பெண்ணிடம் மரியாதையுடன்தான் நடந்து கொள்கிறார். தற்போது இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ, இணையத்தில் மக்களிடையே பல்வேறு கருத்து பரிமாற்றங்களுக்கு ஆளாகி வருகிறது.
நெட்டிசன்கள் கருத்து:
ஒரு சிலர், அந்த பெண் போதையின் பிடியில் இருப்பதால் இப்படி செய்வதாக கூறியிருக்கின்றனர். ஒரு சிலர், விவாதங்களையும் ஆல்கஹாலையும் ஒன்றாக மிக்ஸ் செய்யக்கூடாது என்று கூறி வருகின்றனர். இப்படியாக இந்த வீடியோ பல லட்சம் லைக்ஸ்களையும் வியூஸ்களையும் கடந்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மேலும் படிக்க | எலக்ட்ரிக் காரை இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாமா? அந்த கூத்தை நீங்களே பாருங்க..
மேலும் படிக்க | மணமேடையில் செம அடி வாங்கிய மணமகன்! அடித்து துவைத்த பெண் சொன்ன காரணம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ