உடல் எடையை குறைக்கும் பானம்: உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த கேள்விக்கு உங்கள் பதில் 'ஆம்' எனில், உடல் செயல்பாடுகளுடன் ஆரோக்கியமான உணவும் இதற்கு மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடல் எடை அதிகரிப்பு என்பது இந்த காலத்தில் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாகி விட்டது. பல வித முறைகளில் மக்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் சிலருக்கே இதில் வெற்றி கிடைக்கிறது. உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும் ஒரு எளிய, இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்கும் வெந்தயம்
உடல் எடையை குறைக்க வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெந்தய விதைகள் பல நூற்றாண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இந்த விதைகளை சரியாக உட்கொண்டால், அவை எடையைக் குறைக்கவும் உதவும்.
எடை இழப்புக்கு வெந்தயம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
ஆயுர்வேதத்தின் படி, வெந்தயம் எடை இழப்புக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. வெந்தய விதையில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு நல்லது மற்றும் உடலில் சேரும் நச்சுக்களை இது வெளியேற்றும். இந்த சூப்பர்ஃபுட் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இவை வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக, வெந்தயத்தில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
எடை இழப்புக்கு வெந்தய விதை தண்ணீரை குடிக்கவும்
உடல் எடையை குறைக்க, வெந்தய நீரை உணவில் உட்கொள்வது அதிக நன்மை பயக்கும். ஒரு மேசைக்கரண்டி வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். நீங்கள் விதைகளை தண்ணீரில் கொதிக்கவும் வைக்கலாம். அதை வடிகட்டி வெறும் வயிற்றில் உட்கொள்ளவும்.
வெந்தய தேநீர்: செய்யும் முறை
- வெந்தய தேநீர் தயாரிக்க, ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகள், ஒரு துண்டு இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி தேவைப்படும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் மூன்று பொருட்களையும் சேர்க்கவும்.
- இதைச் செய்ய 5 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும்.
- இந்த தேநீர் உடல் எடையை குறைக்க உதவும்.
- இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை இரண்டிலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
- இவை இரண்டும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
மேலும் படிக்க | காலையில் இதை சாப்பிட்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்
முளைத்த வெந்தய விதைகளை உட்கொள்ளலாம்
- இதற்கு இரண்டு ஸ்பூன் வெந்தய விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- இந்த முளைத்த வெந்தய விதைகளை காலையில் சாப்பிடுங்கள்.
- இதை வெறும் வயிற்றிலும் உட்கொள்ளலாம்.
- இது தவிர, உணவுக்கு இடையிலும் அவற்றை உட்கொள்ளலாம்.
வெந்தயம் மற்றும் தேன் விழுது
- இதற்கு வெந்தய விதைகளை பொடியாக அரைக்க வேண்டும்.
- அதன் பிறகு, அதில் தேன் கலந்து உட்கொள்ளவும்.
- இது தவிர, இந்த வெந்தயப் பொடியை தண்ணீரில் கொதிக்க வைக்கலாம்.
- அதன் பிறகு, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, மூலிகை தேநீர் போல் குடிக்கலாம்.
- தேனில் வைட்டமின் பி, கால்சியம், துத்தநாகம், இரும்பு மற்றும் தாமிரம் போன்றவை உள்ளன. இவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கல்லீரல் பாதுகாப்பு: ஸ்வாமி ராம்தேவ் அளிக்கும் முக்கிய டிப்ஸ் மற்றும் தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ