நாம் வாழும் வாழ்க்கை நமது கல்லீரலை சார்ந்துள்ளது என பலர் கூறுவதுண்டு. இது முற்றிலும் உண்மை. இதற்குப் பின்னால் ஒரு முழு அறிவியல் ஒளிந்திருக்கிறது. அதைப் பற்றி நாம் அனைவரும் நம் பள்ளிப் புத்தகங்களிலும் படித்திருக்கிறோம். இவற்றை நம்மில் பலர் பாடமாக படிக்கிறோம், ஆனால் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துவதில்லை. இதன் விளைவாக, நாட்டில் பலருக்கு கல்லீரலின் நிலை மிக மோசமாக உள்ளது. கல்லீரல் நமது உடலுக்கு எவ்வளவு அவசியமானது என்பது தெரிந்தும் பலர் இதன் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதில்லை.
100 -இல் 90 பேருக்கு ஒரு மிகப்பெரிய கெட்ட பழக்கம் உள்ளது. நம்மில் பலர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல உணவுகள் மற்றும் பானங்களை அடிக்கடி உட்கொள்கிறோம். ஆனால் இவற்றால் நமது உடலின் பல உறுப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட உணவுகள் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகமாகி வருகிறது.
இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் ஹெபடைடிஸ் தொற்று ஆகும். பிரச்சனை என்னவென்றால், ஒருவர் ஒரு முறை ஹெபடைட்டிஸால் பாதிக்கப்பட்டால், அவர் பல நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டி இருக்கலாம். மருந்து சாப்பிடுவதால் ஹெபடைடிஸ் குணமாகிவிடும். ஆனால் சிரோசிஸ் உருவாகி, இது சில ஆண்டுகளுக்குப் பிறகு புற்றுநோயாக மாறும்.
கல்லீரல் பிரச்சனை: ஸ்வாமி ராம்தேவ் இது குறித்து கூறும் முக்கிய விஷயங்கள்:
கல்லீரல் ஆரோக்கியத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது உலகளவில் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. உலகில் ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ஹெபடைடிஸ் காரணமாக ஒரு உயிர் போகிறது. அதன் வேகம் மிக வேகமாக இருப்பதால் கடந்த பத்து ஆண்டுகளில் கல்லீரல் பிரச்சனைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. ஆகவே தாமதிக்காமல், உங்கள் நலனுக்காக உடலின் மிகப்பெரிய சுரப்பியை கவனித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது உயிர்வாழ்வதற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சேமித்து வைக்கிறது. அதுமட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் திறன் கொண்ட ஒரே உறுப்பு இதுவாகும். மேலும் இதில் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், யோகா-ஆயுர்வேதம் ஆகியவை கல்லீரல் பாதுகாப்பில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கல்லீரல் பிரச்சனைகள், காரணம் என்ன?
- வறுத்த உணவு
- மசாலா உணவு
- கொழுப்பு உணவுகள்
- குப்பை உணவு
- சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
- மதுபானம்
கல்லீரலின் செயல்பாடு
- 500 க்கும் மேற்பட்ட வேலைகள்
- நொதிகளை உருவாக்குகின்றன
- இரத்த வடிகட்டி
- நச்சுகளை நீக்க
கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு
- செரிமானம்
- புரதங்களை உருவாக்குவது
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
மேலும் படிக்க | உமிழ்நீர் பரிசோதனை: எவ்வாறு இதய நோய் அபாயத்தைக் கண்டறிய முடியும்?
கல்லீரலை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?
- சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும்
- எடையை குறைக்க வேண்டும்
- வாழ்க்கை முறையை மாற்றவும்
- கொலஸ்ட்ரால் அளவை குறைக்ககவும்
கல்லீரல் ஆபத்திற்கு என்ன காரணம்?
- உயர் பிபி
- அதிக சர்க்கரை
- அதிக கொழுப்புச்ச்த்து
கல்லீரலை கவனித்துக் கொள்ளுங்கள்
- சிறு வயதிலிருந்தே கல்லீரலை பராமரிக்க வேண்டும்
- சைவம் சாப்பிடுவதால் கல்லீரல் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் குறையும்
- தாவர அடிப்படையிலான உணவினால் கொழுப்பு கல்லீரல் சரியாகும்
இவற்றை சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்
- பருவகால பழங்கள்
- பச்சை காய்கறிகள்
- முழு தானியங்கள்
- குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க நிபுணர் பரிந்துரைக்கும் 7 உணவுப் பழக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ