தினமும் 1 பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! என்னென்ன தெரியுமா?

Garlic Health Benefits : தினமும் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா? அது குறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 19, 2024, 04:43 PM IST
  • பூண்டை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
  • உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
  • உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும்
தினமும் 1 பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! என்னென்ன தெரியுமா? title=

Garlic Health Benefits : இந்திய சமையலறையில் அத்தியாவசியமாக இருக்கும் ஒரு உணவுப்பொருட்களுள் ஒன்று பூண்டு. இதனை, கண்டிப்பாக சமையல் செய்யும் மூன்று வேளைகளில் ஏதேனும் ஒரு வேளையில் ஆவது சமையலில் உபயோகித்து விடுவர். இப்படி, அடிக்கடி சமையலில் உபயோகிக்கப்படும் பூண்டில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன தெரியுமா?

நோயெதிர்ப்பு சக்தி:

பூண்டு உபயோகிப்பது, உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாக கூறப்படுகிறது. இது, உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை சமமாக்கி, கெட்ட செல்களை நீக்கவும் உதவுகிறது. இதனால், உடலில் அவ்வளவு எளிதாக தொற்று மற்றும் நோய் பாதிப்புகள் வருவது கடினமாகும் என்பது பரவலான கருத்தாக இருக்கிறது. 

இரத்த அழுத்தத்தை குறைக்கும்:

பூண்டில், அலிசின் எனும் சத்து உள்ளது. இது, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது. மேலும், நிட்ரிக் ஆக்ஸைடையும் அதிகரிக்கும். இதனால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ரத்த அழுத்தம் குறைந்து, உயர் ரத்த அழுத்தம் வராமல் தவிர்க்கலாம்.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பு:

பூண்டு, LDL கொலஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து HDL கொலஸ்ட்ரால் எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனால், நுரையீரல் செயல்பாடு சரிசெய்யப்பட்டு, எந்த பிரச்சனையும் வராமல் இருக்குமாம். மேலும், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் இருந்து குறைவதால் இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் வலிப்பு நோய் உள்ளிட்டவைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது:

பூண்டில், வைட்டமின் சி மற்றும் செல்லினியம் சத்துகள் இருக்கின்றன. இது, நமது உடலில் பாதிக்கப்பட்ட செல்களை மறுசீரமைக்கவும், நாள்பட்ட நோய் பாதிப்புகள் வராமல் தடுக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. இதனால் கொடிய நோயாக கருதப்படும் புற்றுநோயில் இருந்து கூட தப்பிக்கலாமாம். அது மட்டுமன்றி, பூண்டு வயதானாலும் இளமையான தோற்றம் கொடுக்கும் ஒரு உணவாக இருக்கிறது. 

அழற்சி எதிர்ப்பு தன்மை:

பூண்டில் இருக்கும் சல்பர் அளவு, தினமும் நம் உடலில் ஏற்படும் அழற்சி பாதிப்பை தடுக்கும் தன்மை கொண்டிருக்கிறது. இதனால் கைகால் வீக்கம், மூட்டு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். அது மட்டுமன்றி உடலில் திசுக்களை பாதிக்கும் பிரச்சனைகளையும் அரவே ஒழிக்கிறது பூண்டு. 

மேலும் படிக்க | பூண்டை எப்படி சாப்பிட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது? வறுத்தா இல்லை பச்சையாகவா?

செரிமான பிரச்சனைகள்:

அனைத்து வேளைகளுக்கும் நாம் ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிடப்போவதில்லை. ஒருமுறை வயிற்றுக்கு ஏதுவான உணவை எடுத்துக்கொண்டால், இன்னொரு முறை காரமான உணவை எடுத்துக்கொள்வோம். இப்படி வயிற்றுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடும் போது பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கிறது பூண்டு. இதனால் இது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உரிஞ்சலை மேம்படுத்தி குடல் வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளையும் தடுக்கிறது.

உடலுக்கு ஆற்றல் அளிக்கும்:

உடலுக்கு ஆற்றல் அளிக்கும் உணவு பொருட்களுள் ஒன்று, பூண்டு. கடந்த சில நாட்களாக, பலருக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமும், உடலை ஹெல்தியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கிறது. உடற்பயிற்சி மற்றும் பிற உடல் செயல்பாடுகளால் ஏற்படும் உடற்சோர்வை நீக்க, பூண்டை தினமும் நாம் சாப்பிடும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால், நம் தசைகள் உடற்பயிற்சிக்கு பிறகு புத்துணர்ச்சி பெற்று சிறப்பாக செயல்படவும் உதவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News