உடல் ஆரோக்கியத்தை உலுக்கிபோடும் வைட்டமின் பி12 குறைபாடு: அறிகுறிகள், காரணம் என்ன?

Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 அதாவது கோபாலமின் குறைபாட்டால், ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் உருவாக முடியாத நிலை ஏற்படுகின்றது. இது உடலின் பல்வேறு மூலைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க தேவை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 19, 2024, 01:42 PM IST
  • வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?
  • உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
  • கோபாலமின் சேர உட்கொள்ள வேண்டிய உணவுகள்.
உடல் ஆரோக்கியத்தை உலுக்கிபோடும் வைட்டமின் பி12 குறைபாடு: அறிகுறிகள், காரணம் என்ன? title=

Vitamin B12 Deficiency: சிலருக்கு காரணமே இல்லாமல் பலவீனம் ஏற்படுவதுண்டு. ஆரோக்கியமான உடலில் திடீரென ஆரோக்கிய குறைவு ஏற்படுவதுண்டு. வைட்டமின் பி 12 குறைபாடுதான் பெரும்பாலும் இதற்கு காரணமாக இருக்கின்றது. இந்த குறைபாடு காரணமாக உடல் மிகவும் மெலிந்து பலவீனமாகும். இந்த குறைபாடு உள்ளவர்களை பார்த்தாலே எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தலைசுற்றி கீழே விழக்கூடும் என்ற அச்சம் ஏற்படும். வைட்டமின் பி12 உங்கள் நரம்புகளுக்கு மிகவும் அவசியம் என்பதால், அதன் குறைபாடு இப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றது. 

வைட்டமின் பி12 அதாவது கோபாலமின் குறைபாட்டால், ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் உருவாக முடியாத நிலை ஏற்படுகின்றது. இது உடலின் பல்வேறு மூலைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க தேவை. இதன் விளைவாக, உடலில் பலவீனம் ஏற்படுகிறது. நரம்பு மண்டலம் சரியாக செயல்படுவதையும் இது பாதிக்கிறது. டிஎன்ஏ சேதம் மிகவும் தீவிரமான வடிவத்தை எடுக்கலாம்.

வைட்டமின் பி12 குறைபாட்டால் நிகழும் இந்த பிரச்சனைகளை தவிர்க்க, வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் பி 12 குறைவாக உள்ளது. ஆகையால் இயற்கையாகவே வைட்டமின் பி12 உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது. ஆனால் எந்த உணவின் முழு பலனையும் பெற, சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். 

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

உடலில் கோபாலமின் சேர இந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ளலாம். வைட்டமின்களின் அளவைப் பொறுத்து இவை வரிசைப்படுத்தப்ப்பட்டுள்ளன.

- விலங்கு கல்லீரல்
- சிப்பி
- ஊட்டச்சத்துள்ள ஈஸ்ட்
- சால்மன் மீன்
- பால்
- தயிர்
- காலை உணவு சீரியல்கள்
- சீஸ்
- முட்டை
- டெம்பே

மேலும் படிக்க | மெதுவாக ஓடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? வாங்க ஓடலாம்.. மாஸான ஹெல்த் டிப்ஸ்!!

Vitamin B12: வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்

- திடீர் எடை இழப்பு
- தூக்கமின்மை
- இரத்த சிவப்பணுக்கள் குறைதல்
- வெள்ளை இரத்த அணுக்கள் குறைதல்
- இதய படபடப்பு
- மஞ்சள் நிற தோல்
- ஞாபக மறதி
- பிளேட்லெட்டுகளில் குறைவு
- நாக்கில் வீக்கம்
- சோர்வு மற்றும் பலவீனம்

உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்

சில உணவுப் பொருட்களை உட்கொள்வதால் இந்த வைட்டமின் கிடைக்கிறது. அதே போல், சில பொருட்களை உட்கொள்வதால் உடலில் அது குறைகிறது. வைட்டமின் பி12 குறைவாடு ஏற்படாமல் இருக்க தேவையற்ற சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு, அதிகப்படியான சோடியம், ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலின் இயல்பான செயல்பாட்டை பாதித்து பல வைட்டமின்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுகர் இருக்கா... அப்போ சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன் இதை மறக்காம செய்யுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News