கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு: செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்...!

கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அல்லது தீர்வுகள் இல்லையோ அதனை தீர்வாக இணையத்தில் பகிரப்படுகின்றன. அதனை பார்த்து டையட் எடுத்துக் கொள்வது நல்லதல்ல.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 27, 2023, 06:24 AM IST
கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு: செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்...! title=

கொழுப்பு கல்லீரல் நோய் என்பது அண்மைக்காலமாக பொதுவெளியில் அதிகம் பேசப்படுகிறது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களால் இத்தகைய பாதிப்புகள் வருகின்றன. இதனை தவிர்க்கவோ அல்லது மீள முயற்சி செய்ய நினைத்தால், இங்கே இருக்கும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுங்கள்.  

1. உடற்பயிற்சி

மூன்று வகையான உடற்பயிற்சிகள் கொழுப்பு கல்லீரலில் நன்மை பயக்கும். ஏரோபிக் உடற்பயிற்சி, ரெஸிட்டென்ட் பயிற்சி, அதிக தீவிர இடைவெளி பயிற்சி. இதில் ஏதேனும் ஒரு பயிற்சியை தினமும் மேற்கொள்ளுங்கள். 

2. உணவுமுறை

கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கொழுப்புகள் சார்ந்த டையட்டைக் காட்டிலும் குறைவான கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்து டையட்டில் ஆரோக்கியமான மற்றும் குறைவான கலோரி உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க | கோடையில் காலியாகும் நார்ச்சத்து: மாதுளையில் இருக்கும் புத்துணர்ச்சி

3. தூக்கம்

மோசமான தூக்கம், போதிய தூக்கமின்மை (< 6h), மறுசீரமைக்கப்படாத தூக்கம் மற்றும் பகல்நேரத் தூக்கம் > 60 நிமிடங்கள் ஆகியவை அனைத்தும் மோசமான கொழுப்பு கல்லீரல் நோயுடன் நேரடி தொடர்பு கொண்டது. நீங்கள் வழக்கமான  ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறுவது கட்டாயம். இது கல்லீரல் ஆரோக்கியத்துக்கு மிகவும் இன்றியமையாதது

4. காபி

காபி எடுத்துக் கொள்வது கொழுப்பு கல்லீரல் பாதிப்புக்கு சிறந்தது. சர்க்கரை மற்றும் பால் இல்லாமல் வெறுமனே இருக்கும் பிளாக் காபியை நீங்கள் தினமும் மாலைக்குள் 3 கப் குடிக்கலாம். இது ரத்த அழுத்தத்தை பாதிக்காது. 

5. மது

கொழுப்பு கல்லீரல் பாதிப்புக்கு மிகவும் பொதுவான காரணம் மது அருந்துதல் ஆகும். கொழுப்பு கல்லீரலைத் தடுப்பதில் பாதுகாப்பான ஆல்கஹால் அளவு ஜீரோ ஆகும். மது அருந்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக மது அல்லாத ஆல்கஹால் போன்ற குறைந்த கலோரி பானங்களுக்கு மாறவும்.

6. பதப்படுத்தப்பட்ட உணவுகள்

சர்க்கரை - இனிப்பு மற்றும் பதப்பபடுத்தப்பட்ட உணவுகளில் இருந்து நீங்கள் முழுமையாக விலகி இருங்கள். இவை கல்லீரல் கொழுப்பை பெருமளவில் அதிகரிக்கலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே காணப்படும் கொழுப்பு கல்லீரலுக்கு இவை பிரதான காரணமாக இருக்கின்றன. அதேபோல் செயற்கை இனிப்பூட்டிகளையும் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.  

7. மருந்துவ சிகிச்சை

கொழுப்பு கல்லீரல் நோய்க்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் எதுவும் இல்லை. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் வைட்டமின் ஈ மற்றும் பியோகிளிட்டசோன் ஆகியவை அடங்கும். வேறு எந்த மருந்துகளும் பயனுள்ளதாக இல்லை. இவை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் தொடர்புடைய பிற ஆபத்து காரணிகள் நன்கு கட்டுப்படுத்தப்படும் வரை மட்டுமே.

8. இது ஒரு நோய் அல்ல

கொழுப்பு கல்லீரல் நோய் என்பது தவறான பெயர். இது உண்மையில் ஒரு நோய் அல்ல. கொழுப்பு கல்லீரல் நோயுடன் ஆல்கஹால் பயன்பாடு, நீரிழிவு, உடல் பருமன், ஹைப்போ தைராய்டிசம், தூக்கக் கோளாறு, உட்கார்ந்த வாழ்க்கை போன்றவை நேரடியாக தொடர்பு கொண்டிருக்கின்றன. இது குறித்து கவனம் கொள்ளுங்கள். 

9. எது வேலை செய்யாது?

கிரீன் டீ, ஒமேகா-3 சப்ளிமெண்ட்ஸ், டிடாக்ஸ் பொருட்கள், யோகா (ஏரோபிக் இல்லாததால்), பழவகை உணவுகள், கிராஷ் டயட், மஞ்சள்/இலவங்கப்பட்டை சப்ளிமெண்ட்ஸ், தேன் அல்லது தேங்காய் சர்க்கரைக்கு மாறுதல், மூலிகை கலவைகள், Ursodeoxycholic அமிலம், பால்-திஸ்டில் உள்ளிட்ட "கல்லீரல் டிடாக்ஸ்" என்று எழுதப்பட்ட எந்தவொரு தயாரிப்பும் & "ரிவர்ஸ் ஃபேட்டி லிவர்" என்று எழுதப்பட்ட எந்த தயாரிப்பு அல்லது விளம்பரமும் உபயோகப்படாது.

மேலும் படிக்க | சுகர் நோயாளிகள் கவனத்திற்கு..இந்த தவறுகளை ஒரு போதும் செய்ய வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News