உடல் பருமன் பிரச்சனையா? சாப்பாட்டை தவிர்க்காமலேயே குறைக்கலாம்.. இதோ வழி

Weight Loss Tips: தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் மக்கள் பல்வேறு முறைகளை பின்பற்றுகிறார்கள். சிலர் ஜிம் சென்று பல விதமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2024, 03:18 PM IST
  • ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க, நமது உணவில் அனைத்து ஆரோக்கியமான பொருட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இதற்கு சமச்சீரான உணவை தினமும் உட்கொள்ள வேண்டும்.
  • அதில் சாதம் அல்லது சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள், தயிர் என அனைத்தும் இருக்க வேண்டும்.
உடல் பருமன் பிரச்சனையா? சாப்பாட்டை தவிர்க்காமலேயே குறைக்கலாம்.. இதோ வழி

Weight Loss Tips: உடல் பருமன் என்பது இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. உடல் பருமனால் ஒருவரது ஆளுமை குறைவது மட்டுமல்லாமல் இதனால் பல உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் ஏற்படும் மாற்றங்கள். மோசமான மற்றும் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை காரணமாக, எடை அதிகரிப்பு பிரச்சனை மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது. 

Add Zee News as a Preferred Source

உடல் எடை குறைய

தொப்பை கொழுப்பை குறைக்கவும் (Belly Fat) உடல் எடையை குறைக்கவும் மக்கள் பல்வேறு முறைகளை பின்பற்றுகிறார்கள். சிலர் ஜிம் சென்று பல விதமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் இவற்றாலும் பலருக்கு பெரிய வித்தியாசம் ஏற்படுவதில்லை. எனினும், சில எளிய வழிகளிலும் நாம் நமது உடல் எடையை குறைக்க முடியும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்தால், எடை மீண்டும் மீண்டும் அதிகரிக்காது. ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. இவற்றில் ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உணவின் மூலம் எடை இழப்பு

எடை இழக்க (Weight Loss) நாம் கண்டிப்பாக நமது உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவில் அதிக புரதச்சத்து இருக்க வேண்டும். இது மட்டுமின்றி அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் சேர்ந்துள்ள வகையில் நம் உணவு இருக்க வேண்டும்.     

மேலும் படிக்க | ஒரே மாதத்தில் தொப்பை கரைய... கை கொடுக்கும் ‘சூப்பர்’ யோகாசனங்கள்!

ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க வேண்டும்

- உடல் எடையை குறைக்க, பலர் தங்கள் உணவில் இருந்து அரிசி, நெய் போன்றவற்றை விலக்கி விடுகிறார்கள்.

- நமது உணவில் இருந்து கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்பை நீக்குவது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று பலர் நினைப்பதுண்டு.

- ஆனால் இது தவறான கருத்து. 

- ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க, நமது உணவில் அனைத்து ஆரோக்கியமான பொருட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

- இதற்கு சமச்சீரான உணவை (Balanced Diet) தினமும் உட்கொள்ள வேண்டும். அதில் சாதம் அல்லது சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள், தயிர் என அனைத்தும் இருக்க வேண்டும். 

- இது உடல் எடையை குறைக்க சரியான வழியாக இருக்கும்.

எடை குறைந்து மீண்டும் எடை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சிலருக்கு சில முயற்சிகள் மூலம் எடை குறைந்து விடுகிறது. ஆனால், சில நாட்களில் அவர்கள் அந்த முயற்சியை நிறுத்தியவுடன் மீண்டும் எடை அதிகரித்துவிடும். அப்படி ஆகாமல் இருக்க சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உணவில் புரதம் அதிகமாவும், அனைத்து ஊட்டச்சத்துகளும் இருந்தால், அடிக்கடி எடை அதிகரிக்கும் பிரச்சனை ஏற்படாது. மேலும் நமது உணவில் முழுவதுமாக எண்ணெய், நெய், சாதம் போன்றவற்றை சிறிது காலத்திற்கு நீக்கிவிட்டு, பின்னர் அதை உணவில் சேர்க்கும்போதும் உடல் எடை அதிகமாகும். ஆகையால், எந்த வித எடை இழப்பு முயற்சி எடுத்தாலும், எந்த அடிப்படை உணவையும் முற்றிலுமாக தவிர்க்காமல், சரியான அளவுகளில் உட்கொள்வதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கல்லீரல் நோய்க்கான அறிகுறிகள் இவைதான்.. உஷார் மக்களே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News