அவக்கேடா பழத்தில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், செரிமானத்தை மேம்படுத்துதல், மனச்சோர்வு அபாயத்தைக் குறைத்தல், எலும்பு இழப்பைத் தடுப்பது, இதய ஆரோக்கியத்தை ஆதரித்தல் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாத்தல் என ஒரு மருந்தாகவே செயல்படுகிறது.
அவகோடா பழத்தில், நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K1, B6, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாது உப்புக்கள், நல்ல கொழுப்புக்கள், என பல சத்துக்கள் அடங்கியுள்ளன. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த பழம் அவக்கேடா. நார்ச்சத்து அளவுக்கு அதிகமாகவே இந்த பழத்தில் உள்ளது..
மூட்டு வலிக்கு நிவாரணி
அவகேடோ பழத்தில் உள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்சனைகளை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது.. அதனால், ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம், ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதிலுள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், மூல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் புற்றுநோயை தடுக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மேலும் படிக்க | ஒரே நாள்ல ஹார்ட் அட்டாக் வராது! உயிருக்கே உலை வைக்கும் இந்த அறிகுறிகள் இருக்கா?
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் அவக்கேடா
ஆனால், புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கும் இடையே நேரடி தொடர்பை ஆய்வுகள் இன்னும் மதிப்பிடவில்லை. இருப்பினும், அவக்கேடாவில் உள்ள சில கலவைகள் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை கணிசமாக குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
பெருங்குடல், வயிறு, கணையம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதாகவும் கூறும் ஆராய்ச்சி அதற்கு காரணமாக அவக்கேடாவில் உள்ள ஃபோலேட் சத்து இதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிப்பதாக தெளிவுபடுத்தியுள்ளது.
பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் கரோட்டினாய்டுகள்
அதுமட்டுமல்ல, இதிலுள்ள அதிக அளவு பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கரோட்டினாய்டுகள் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று நம்பகமான ஆதாரங்கள் காட்டுகின்றன.
அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, பத்து நாட்கள் தொடர்ந்து அவக்கேடா பழத்தை சாப்பிட்டு வந்தால், பெருங்குடல், நுரையீரல் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாகக் கண்டறிந்தது. இருந்தாலும், ஒட்டுமொத்த புற்றுநோய் அல்லது பிற தளம் சார்ந்த புற்றுநோய்களின் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் உறுதி செய்யப்படவில்லை.
மேலும் படிக்க | சட்டுபுட்டுன்னு சக்கரையைக் குறைக்கும் பழம்! தாட்பூட் பழத்தின் மருத்துவ குணங்கள்
கருவின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அவக்கேடா
ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஃபோலேட் சத்து முக்கியமானது. அவக்கேடாவை போதுமான அளவு உட்கொள்வது கருச்சிதைவு மற்றும் நரம்புக் குழாயில் நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு, தினசரி 600 மைக்ரோகிராம் (எம்.சி.ஜி) ஃபோலேட்டின் சத்து தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
அவக்கேடாவில் கொழுப்புச்சத்து
கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள அவக்கேடா பழம், ஆரோக்கியமான உணவு என்பதுடன் கரு வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த நம்பகமான ஆதாரமாக இருப்பதால், அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பழம் என்று அருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதைத்தவிர, ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவக்கேடா சிறந்தது என்று கூறப்படுகிறது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிரம்பிய ஊட்டச்சத்து-அடர்த்தியான சூப்பர்ஃபுட் பழம் நோயற்ற வாழ்வுக்கு உதவுகிறது.
நோயற்ற வாழ்வுக்கு அவக்கேடா
இதயத்திற்கு உகந்த மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட அவக்கேடாவில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் (MUFA)உள்ளது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிரம்பிய ஊட்டச்சத்து-அடர்த்தியான சூப்பர்ஃபுட் ஆகும்.
அவக்கேடாவில் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இது, இரத்தத்தில் உள்ள LDL அளவுகள், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. ZEE NEWS பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை குறைக்க சிறப்பான வழி! 3 மாதங்களுக்கு நோ அசைவம்! ஒன்லி சைவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ