புதுடெல்லி: குரங்கு அம்மை நோயை தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் நிபுணர்களின் பதில் அதிர்ச்சியளித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிறகு, மக்களின் மனதில் தொற்றுநோய் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரஸின் மாறுபாடுகள் ஏற்படுத்திய பீதியை மறக்கவும் தவிர்க்கவும் முடியாது.
இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவ ஆரம்பித்து, உலகின் 63 நாடுகளில் சுமார் 9,200 பேர் பாதித்தனர். இந்த பரவலை தவிர்த்திருக்கலாம் என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின் (யுசிஎல்ஏ) தொற்றுநோயியல் பேராசிரியரான அன்னே ரிமோயின் கருத்துப்படி, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு பாக்ஸ் தொற்று பல தசாப்தங்களாக உள்ளது, ஆனால் கிராமப்புற ஆப்பிரிக்காவைத் தாண்டி ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு வைரஸ் பரவிய பின்னரே அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
மேலும் படிக்க | Monkeypox Symptoms: இங்கிலாந்தில் பாலியல் கிளினிக்குகள் மூலமாக குரங்கு அம்மை நோய்
நாம் குரங்கு அம்மை நோய் பரவலுக்கு எதுவும் செய்யவில்லை
"இந்த வைரஸ் பல தசாப்தங்களாக ஆப்பிரிக்காவின் தொலைதூர பகுதிகளில் இருந்துவருகிறது. அது பற்றி தெரிந்தும், நாம் எதுவும் செய்யவில்லை" என்று ரிமோயின் சுட்டிக்காட்டினார்.
"குரங்கு அம்மை காய்ச்சல் என்பது பல தசாப்தங்களாக ஒரு சாத்தியமான சுகாதார பிரச்சனை என்பது அனைவருக்கும் தெரியும்," என்று அவர் மேலும் கூறினார்.
குரங்கு அம்மை நோய் பொதுவாக பெரிய ஆபத்தை விளைவிப்பதில்லை என்பதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவு முற்றிப்போவதில்லை என்பதால் இது குறித்து அதிக கவலைப்படவில்லை.
குரங்கம்மை நோய், பெரும்பாலும் காற்றில் பரவுவதில்லை, மக்கள் நெருங்கிப் பழகும்போது தான் நோய்த்தொற்றை பெறுகிறார்கள். என்றாலும், பல தசாப்தங்களாக இருக்கும் நோய் தொடர்பாக சோதனைகளும், தடுப்பூசிகள் இல்லாதது தற்போதைய பரவைன் பின்னணியில் உள்ள பிரச்சனையாகும்.
மேலும் படிக்க | வேகமாக பிறழும் குரங்கு அம்மை வைரஸ்; WHO
இது பற்றி கவலை தெரிவிக்கும் ரிமோயின், கடந்த 20 ஆண்டுகளாக காங்கோ ஜனநாயகக் குடியரசில் குரங்கு அம்மை நோய் தொடர்பாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள், ஓரிரு நாட்களுக்கு முன்னர், கடந்த திங்களன்று தான், குரங்கு காய்ச்சலுக்கான பரிசோதனையைத் தொடங்கியுள்ளன.
"இது சோதனை திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வழங்குநர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சோதனைகளை அணுகுவதற்கு மிகவும் வசதியாக இருக்கும்" என்று CDC இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் கிராமப்புறங்களில் குரங்கு அம்மை நோய் பல ஆண்டுகளுக்கு முன்பே பரவிய நிலையில், அந்த வைரஸ் தொடர்பாக அதிக கவனம் செலுத்தாதும், தடுப்பூசியோ மருந்தோ கண்டறியாததும், நோய் எதிர்ப்புத்துறையில் தயார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பதை காட்டுவதாக ரிமோயின் கூறுகிறார்.
மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்
பெரியம்மை ஒழிப்பு மற்றும் பெரியம்மை தடுப்பூசி முடிவுக்கு வந்ததில் இருந்து குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதை ஆவணப்படுத்திய ஒரு அய்வுக் கட்டுரையை 2010 இல் அவர் இணைந்து எழுதியதாக அவர் கூறினார், பெரியம்மை தடுப்பூசி குரங்கு காய்ச்சலில் இருந்து மக்களைப் பாதுகாக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"தொற்று நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய நோய் அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று ரிமோயின் கூறினார்.
"வர்த்தகம், பயணம், மக்கள்தொகை வளர்ச்சி, மக்கள்தொகை இயக்கம் ஆகியவற்றால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. எனவே உலகின் வேறொரு மூலையில் ஏற்படும் நோய் ஆபத்து, துரிதகதியில் உலகம் முழுவதும் பரவுகிறது. எனவே, உலகின் தொலைதூரப் பகுதியில் எங்காவது நடக்கும் ஒரு தொற்று, பாதுகாப்பாக வீட்டில் இருப்பவரை பாதிக்காது என்று நினைத்து, அலட்சியப்படுத்தக்கூடாது” என்று அவர் கூறுகிறார்.
"நாம் தொடர்ந்து தொற்றுநோய்கள் தொடர்பாக அலட்சியமாகவோ அல்லது கவனக்குக்றைவாகவோ இருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கான விலையை செலுத்த வேண்டியிருக்கும் " என்று கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின் (யுசிஎல்ஏ) தொற்றுநோயியல் பேராசிரியரான அன்னே ரிமோயின் எச்சரிக்கை விடுக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR