உடலுறவு வைத்துக்கொண்டால் அறிவாளி ஆகலாமா? ஆய்வுகள் கொடுக்கும் சுவாரஸ்ய தகவல்..

மருத்துவ ஆய்வு ஒன்று, உடலுறவு வைத்துக்கொள்வது, நம்மை ஸ்மார்ட் ஆக ஆக்கும் தெரிவித்துள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Apr 14, 2024, 07:20 PM IST
  • உடலுறவு கொள்வதால் ஏற்படும் பலன்கள்
  • இதனால் அறிவாளியாகலாமா?
  • மருத்துவர்கள் கூறுவது என்ன?
உடலுறவு வைத்துக்கொண்டால் அறிவாளி ஆகலாமா? ஆய்வுகள் கொடுக்கும் சுவாரஸ்ய தகவல்.. title=

ஒரு படத்தில், “உலகிலேயே மிகவும் கடினமான இயந்திரம் எது தெரியுமா? மனிதன்தான்” என்று கூறுவர். மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அப்பார்பட்ட, யாராலும் நம்ப முடியாத நிகழ்வுகள் கூட, நம் உடலில் நடைபெறும். அப்படி நடைபெறும் நிகழ்வுகள் நம்மை அறியாமலும் நடக்கும். அப்படி, மனிதர்கள் மேற்கொள்ளும் உடலுறவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், இது ஒருவரின் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது. 

உடலுறவு:

ஆதி மனிதன் எப்போது பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை ஏற்றுக்கொண்டானோ அப்போதே அவன் ஏற்றுகொண்ட இன்னொரு உணர்வு, காமம். இந்தியாவை பொறுத்தவரை செக்ஸ் அவசியம் என்றாலும், இது குறித்த கல்வியும், உரையாடல்களும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால், இதை பற்றி பேசினாலே பலர் கலாச்சார சீர்கேடாக நினைக்கின்றனர். அதிலும், பெண்கள் இதைப்பற்றி பேசினால், அது அபத்தமாக பார்க்கப்படுகிறது. இப்போது நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நிலையில், இது குறித்த புரிதலும் அனைவருக்குள்ளும் எழுந்துள்ளது. இதனாலேயே, இது குறித்த ஆராய்ச்சிகளும் தற்போது நடைப்பெற்று வருகிறது. 

உடலுறவு குறித்த ஆராய்ச்சி..

உடலுறவு மன அழுத்தத்தைக் குறைக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுவது மட்டுமன்றி, அதை செய்வோரின் புத்திசாலித்தனத்தையும் அதிகரிக்க உதவுவததாக மருத்துவ ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. உடலுறவு வைத்துக்கொள்வது, குறிப்பாக காதலுடன் உடலுறவு கொள்ளும் போது புதிதாக உருவாகும் நியூரான்கள் உருவாகும். இதனால், அறிவாற்றல் திறன்கள் அதிகரிக்கும் என அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்தியிருந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்டுள்ளது. 

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் எலிகளை ஈடுபடுத்தியுள்ளனர். அதில் உடலுறவு கொள்ளாமல் நீண்ட காலம் இருக்கும் எலி, அறிவாற்றல் திறன் குறைவாக இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. 

இதற்கு காரணம் என்ன?

உடலுறவு கொள்வதால், ஒரு தனி மனிதரின் மூளை செல்களுக்கு ஆக்சிஜன் ஆற்றல் அதிகரிப்பதாக மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல, தென் கொரியாவிலும் உடலுறவை வைத்து ஒரு ஆராய்ச்சி நடைப்பெற்றது. இதிலும், உடலுறவு கொள்வது நமது அறிவாற்றலை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்னொரு தகவல் தெரியுமா? வயதாகியும் தங்களது படுக்கையறை வாழ்க்கையில் வெற்றிகரமாக இருப்பவர்களுக்கு மறதி நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | முதல்முறை உடலுறவு:நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ‘அந்த’ 3 விஷயங்கள்!

உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:

>தொடர்ச்சியான உடலுறவு கொள்வது, ஹிப்போகாம்பஸ் பகுதியில் அதிக மூளை செல்களை உருவாக்குகிறது, இது தகவல்களை தக்க வைத்துக்கொள்ளும் பகுதியை பாதுகாக்கிறது.

>மன அழுத்தம் ஏற்படுதல் உடலுக்கும் மனதிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் கவனச்சிதரல், பதற்றம் ஆகியவை ஏற்படும். அதனால், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்வது இதனை நீக்க உதவும் என்று கூறப்படுகிறது. உடலுறவு கொள்வதனால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் குறைகிறதாம். இதனால், நெகடிவ் உணர்வுகள் மூளையில் தங்காமல் இருக்கும் என்றும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

>நினைவாற்றலை அதிகரிக்கவும் உடலுறவு உதவுவதாக கூறப்படுகிறது. 58 முதல் 98 வயது வரை இருப்பவர்களை வைத்து ஒரு மருத்துவ ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், ஆக்டிவாக உடலுறவு கொள்பவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

(பொறுப்பு துறப்பு: உடல்நலம் தொடர்பான எதையும் நீங்கள் எங்கும் படித்தால், அதை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். ZEE MEDIA இதற்கு எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

 

மேலும் படிக்க | ஒருவர் சாப்பிட்ட உடனேயே நடக்கலாமா? கூடாதா? தெரிந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News