World Liver Day: கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க கவனத்தில் கொள்ள வேண்டியவை

கல்லீரல் மனித உடலில் மூளைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மற்றும் மிக முக்கியமான உறுப்பு ஆகும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கல்லீரல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 18, 2022, 04:26 PM IST
World Liver Day: கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க கவனத்தில் கொள்ள வேண்டியவை title=

உலக கல்லீரல் தினம் 2022 ஏப்ரல் 19 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் (World Liver Day) கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அது தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை உலகில் பரப்பவும் அனுசரிக்கப்படுகிறது.

கல்லீரல் மனித உடலில் மூளைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மற்றும் மிக முக்கியமான உறுப்பு ஆகும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கல்லீரல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களது உனவு பழக்கம் அல்லது உங்கள் தினசரி பழக்கம் கல்லீரலை பாதிக்கிறது. எனவே இந்த உறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். கல்லீரல் சரியாக செயல்படாவிட்டால், உயிரிழக்க நேரிடும். 

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. நல்ல உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள்

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் தினசரி வழக்கத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதை வழக்கப்படுத்துங்கள். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி ஆகியவற்றை உட்கொள்வது உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன

2. உணவில் சாலட்டின் அளவை அதிகரிக்கவும்

சாலட்களில் புரதம், நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் இருப்பதால், எல்லா காலங்களிலும் சாலட்களை சாப்பிடுவது நல்லது. எனவே, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க, பருவகால காய்கறிகளின் சாலட்களை சாப்பிடுங்கள்.

3. அதிகமாகச் சாப்பிடக் கூடாது

பல நேரங்களில் மக்கள் தன்னை அறியாமல் அதிகமாக சாப்பிடுகிறார்கள். அதனால் அவர்களின் செரிமான அமைப்பில் பிரச்சினைகள் எழுகின்றன. எனவே, குறைந்த அளவிலேயே உணவை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், இது உங்கள் செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்கும் மற்றும் கல்லீரலில் எந்த மோசமான பாதிப்பும் ஏற்படாது.

4. புரத உட்கொள்ளலை அதிகரிக்கவும்

உங்கள் டயட் பிளானில் புரதம் நிறைந்த உணவுகளின் அளவை அதிகரிக்கவும். இவற்றில், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், தயிர் மற்றும் முட்டை ஆகியவை சிறந்த தேர்வாகும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

5.  தவிர்க்க வேண்டியவை

உணவு உண்ணும் போது உப்பு அல்லது சர்க்கரையை அதிகமாக பயன்படுத்த வேண்டாம். மேலும், துரித உணவு அல்லது வறுத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். இவை அனைத்தும் உங்கள் கல்லீரலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News