புதுடெல்லி: உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளிடமிருந்து COVID-19 பற்றிய தரவை JHU எனப்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரிக்கிறது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,633,678. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,38,395 என்றும், உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 63,15,864. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கிடைத்துள்ள தரவுகளின்படி,
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,19,664 ஆகவும், பலி எண்ணிக்கை 20,160 ஆகவும் உயர்ந்துவிட்டது.
மெல்போர்னில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பால், புதன்கிழமை முதல் ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியது
இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பரவல் உச்சக்கட்டத்தில் இருப்பதால், மதுக்கடை பார்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்களை மூட உத்தரவு.
READ | நமது வாழ்கை துணையுடன் படுக்கையை பகிர்வதால் மன அழுத்தம் குறையும்..!
பெய்ஜிங்கில் கடந்த 26 நாட்களில், புதிதாக COVID-19 நோய்த்தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை எனஅறிவிக்கப்பட்டுளது.
கொரோனா நோய்த்தொற்று தாக்கம் கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல் இது-
1. அமெரிக்கா - 29,36,077
2. பிரேசில் - 16,23,284
3. இந்தியா - 7,19,664
4. ரஷ்யா - 6,86,852
5. பெரு - 3,05,703
6. சிலி - 2,98,557
7. இங்கிலாந்து - 2,87,290
8. மெக்சிகோ - 2,61,750
9. ஸ்பெயின் - 2,48,970
9. இத்தாலி - 2,51,789
10. இரான் - 2,43,051