சுட்டெரிக்கும் கோடை வெயிலில் உடலைச் சீராக நோயின்றி வைத்துக்கொள்ள, ஒவ்வொருவரும் அதற்குத் தகுந்த உணவுமுறையை பின்பற்றுவது நல்லது.
கோடையை சமாளிப்பதற்கு பலரும் பல்வேறு முறைகளைக் கையாள்வோம். கோடையில் உடலை பாதுகாக்க பழங்களில் இருக்கும் நீர்த்தன்மையும், சுவையும் கோடைக்கு நல்ல வரப்பிரசாதமாக அமையும்
அவற்றைத் தடுக்கவும் சமாளிக்கவும் சில குறிப்புகள்...!
வெயில் காலத்தில் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
காபி மற்றும் டீ உடல் வெப்பத்தை அதிகரிக்கும் குணங்கள் கொண்டவை எனவே வெப்ப சூட்டை தவிர்த்துக்கொள்ள டீ மற்றும் காபியை தவிர்ப்பது நல்லது.
அதற்கு பதில் கிரீன் டீ அருந்த வேண்டும். கிரீன் டீயில் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் உடல் நிலையைச் சீராக வைத்துக்கொள்ளும்.
கோடையில் உடலை பாதுகாக்க பழங்களில் இருக்கும் நீர்த்தன்மையும், சுவையும் கோடைக்கு நல்ல வரப்பிரசாதமாக அமையும்.
ராகி உடல் வெப்பத்தை அதிகரிப்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது. இறைச்சி, முழு பருப்பு வகைகள் மற்றும் எண்ணைப் பலகாரங்கள். இவை அனைத்தும் வெயில் காலத்தில் பலருக்கு அஜீரனத்தை தரும் இதனால் வயிற்றுப் போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் தவிர்ப்பது நல்லது.
உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் இன்னும் சூடு அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைவதால், வயிறு இழுத்துப் பிடித்தல், அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர், நீர்மோர் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
வெயில் காலத்தில் அம்மை நோய்கள் அதிகம் தாக்கும். இளநீர், பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், நீர்ச்சத்தைச் சரியாகப் பராமரித்தா அம்மை நோய்களைத் தவிர்க்கலாம்.
குழந்தைகளைத் தினமும் இரண்டு முறை குளிக்க வைப்பதன் மூலம் உடல் சூட்டைக் குறைக்க முடியும். அடிக்கடி முகத்தைக் கழுவுவதால், சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
வெயிலில் சருமம் அழகாக வேண்டுமா.......!
கொஞ்சம் ரோஜா இதழ்களை இளநீர் விட்டு மையாக அரைக்கவும். அதை முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவ, வெயிலினால் வறண்டு போன சருமம் பளபளப்பாகும். மேலும், சரும துவாரங்களும் மூடும்.
நுங்குத் தண்ணீரை, காய்ச்சாத பாலில் கலந்து, முகம், கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளிக்க, குளுகுளுவென உணர்வீர்கள்.
எலுமிச்சம்பழம், ஆரஞ்சுப்பழத் தோல்களை வீணாக்காமல் சின்னச் சின்னதாக வெட்டி, வெயிலில் காய வைத்து, கொஞ்சம் கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் பன்னீர் விட்டுக் குழைத்து, முகத்துக்குத் தடவினால், முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கும்.