பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட பாலிவுட் நடிகர்கள்

இந்தி திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 10, 2019, 07:00 PM IST
பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட பாலிவுட் நடிகர்கள்

பாலிவுட்டின் புதிய முகங்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அலியா பாட் மற்றும் வருண் தவான் உட்பட பல நட்சத்திரங்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு நடக்குவதற்க்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் பிரதமர் மோடி அவர்கள், பாலிவுட் தயாரிப்பாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது சினிமாவைப் பற்றிய பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் பிரதமர் விவாதித்தார். அதன பின்னர் சினிமா துறை மீதன ஜி.எஸ்.டி. வரியை குறைத்தது.

நமக்கு கிடைத்த தகவலின் படி, இன்று திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமரும் கலந்துக்கொண்டார். இதுக்குறித்து தகவலை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனாலும் இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைபடம், திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தாரன் அதர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதில் நடிகர் ரன்வீர் சிங் செல்பி எடுக்கிறார். 

 

இந்த கூட்டம் தயாரிப்பாளர் கரன் ஜோஹர் ஏற்பாடு செய்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் திரைப்படத் துறையின் பிரதிநிதிகளும்,  இயக்குநர்களும், நடிகர்களும் கலந்துக்கொண்டனர். 

More Stories

Trending News