ராஜஸ்தானின் தோல்பூரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 10 பேர் பலி!!
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பர்பதி ஆற்றில் துர்கா சிலை கரைப்பு நிகழ்வின் போது ஆற்றில் மூழ்கி குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளனர். செய்தி நிறுவனமான ANI-ன் தகவலின் படி, அதிகாரிகள் இதுவரை பத்து சடலங்களை மீட்டுள்ளனர், மற்றவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு துர்கா சிலை கரைக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொண்ட தோல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகேஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில்; "சம்பவத்தின் போது பத்து பேர் நீரில் மூழ்கிவிட்டனர். ஏழு சடலங்களை எங்களால் மீட்க முடிந்தது. இரவு முழுவதும் தேடல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன, புதன்கிழமை எங்கள் தேடலை மீண்டும் தொடங்குவோம். "
UPDATE: A total of 10 people had drowned during Durga idol immersion in Parbati river in Dholpur. https://t.co/dPqPqtNHEh
— ANI (@ANI) October 9, 2019
இறந்தவரின் உறவினர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ .1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஜெய்ஸ்வால் மேலும் தெரிவித்தார்.
"நீரில் மூழ்கியபோது, சிறுவர்களில் ஒருவர் குளிக்க ஆற்றில் குதித்தார், ஆனால் அவர் நீரில் மூழ்கத் தொடங்கினார். மற்றவர்களும் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஆற்றில் குதித்தனர், ஆனால் அவர்களும் நீரில் மூழ்கினர்" என்று அந்த இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.