போதையக்கி 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியர்!!

இரண்டு பழங்குடி சிறுமிகளை போதையக்கி பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பள்ளி ஊழியர்கள்!!

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கான ஒரு குடியிருப்பு பள்ளியில் படிக்கும் இரண்டு பழங்குடி சிறுமிகள், இரண்டு பள்ளி அதிகாரிகளால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுவர்களை கற்பழித்ததாக கைது செய்யப்பட்ட சாம்பியன் பச்சரே மற்றும் துணை கண்காணிப்பாளர் நரேந்திர வைருகர் ஆகியோர் கைது செய்துள்ளனர். மேலும், இரண்டு பெண் ஊழியர்கள் - விடுதி வளாகம் கல்பனா தக்ரே மற்றும் உதவியாளர் லதா கனக் ஆகியோரையும் கைது செய்துள்ளந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜூரா தெஹ்ஸில் அமைந்துள்ள குடியிருப்புப் பள்ளி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தனியார் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. ஒன்பது மற்றும் 10 வயதுடைய சிறுமிகள் ஏப்ரல் 6 ஆம் தேதி சந்திரபூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (GMCH) அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையின் போது, மகளிர் மருத்துவ நிபுணர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டதற்கான அதிகப்படியான அறிகுறிகள் இல்லை என தெரிவித்துள்ளனர். 

மற்றொரு சிறுமி, சுயநினைவின்மை போன்ற துன்பங்களை எதிர்கொண்டிருக்கிறது. மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுப்பப்பட்டுள்ளார். குற்றவாளிகள் மீது காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். 

 

Section: 
English Title: 
2 minor tribal girls allegedly drugged, sexually abused by school staff in Maharashtra's Chandrapur
News Source: 
Home Title: 

போதையக்கி 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியர்!!

போதையக்கி 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியர்!!
Yes
Is Blog?: 
No
Facebook Instant Article: 
Yes
Mobile Title: 
போதையக்கி 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்!!
Publish Later: 
No
Publish At: 
Wednesday, April 17, 2019 - 11:35