இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உட்பட 20 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2020, 11:09 AM IST
இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு! title=

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உட்பட 20 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!

பிரிட்டனில் (Britain) பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் புதிய திரிபு (coronavirus new strai) இப்போது இந்தியாவில் பரவி வருகிறது. மேலும் COVID-19 இன் புதிய வடிவம் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை பிரிட்டனில் இருந்து தாயகம் திரும்பிய 20 பயணிகள் புதிய திரிபு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாயன்று, இந்தியாவில் 6 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர், தற்போது இவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இந்த பாதிக்கப்பட்ட அனைவருமே அந்தந்த மாநில அரசுகளால் (State Govt) சுகாதாரப் பாதுகாப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுடன் தொடர்பு கொள்ளும் மக்களும் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். இதனுடன், சக பயணிகள், குடும்ப தொடர்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பெரிய அளவிலான தொடர்பு தடமறிதல் தொடங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 100-க்கும் மேற்பட்டோர் புதிய கொரோனாவால் பாதிப்பு

சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை, பிரிட்டனில் (Britain) இருந்து சுமார் 33 ஆயிரம் பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், டிசம்பர் 23 முதல் முன்னெச்சரிக்கையாக இந்திய அரசு பிரிட்டனில் இருந்து இந்தியா வழித்தட விமான சேவையை நிறுத்தியது.

ALSO READ | புதிய COVID பழைய வைரஸுக்கு ஆபத்தானது; குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்!

New Corona Strain in India

எந்தெந்த நாடுகளில் கொரோனாவின் புதிய திரிபு கண்டறிந்துள்ளன?

கொரோனா வைரஸின் (Coronavirus) முதல் திரிபு பிரிட்டனில் உறுதி செய்யப்பட்டது. பின்னர் இது இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பரவியுள்ளது என்பதை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள். இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் மற்றும் நைஜீரியாவில் இந்த நாடுகளில் வைரசின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, தென்னாப்பிரிக்காவிலும் கொரோனாவின் புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டனில் காணப்படும் புதிய திரிபுக்கு வேறுபட்டது.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News