பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிந்தது. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆக்கபூர்வமான தொடராக இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூலை 18 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் (ஆகஸ்ட் 10) முடிந்தது. இந்த கூட்டத்தொடரில் 20 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது, அதில் 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் மக்களவை 110 சதவீதமும், ராஜ்யசபா 66 சதவீதமும் பணியாற்றினார். மக்களவை 50 சதவீதம், ராஜ்யசபா 48 சதவீதம் சட்டமியற்றும் வேலைகளில் ஈடுபட்டன என பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதான் இதுவரை அதிகமாக செயல்பட்ட கூட்டத்தொடரில் தற்போது முடிவடைந்த 16_வது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முதலிடத்தில் உள்ளது. இதற்க்கு அடுத்த படியாக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடர் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த 16_வது மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் மிகவும் அதிகமாக கேள்வி நேரங்கள் இருந்தது. அதாவது லோக்சபா 84% மற்றும் ராஜ்யசபா 68% மேலாக கேள்வி நேரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 17 முறை அவை கூட்டப்பட்டதாகவும், 112 மணி நேரங்கள் அவை நடைபெற்றதாகவும் தனது அறிக்கையில் கூறினார்.
16_வது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சம்பந்தமான அரசு பில்கள் அதிகபட்சமாக அறிமுகப்படுத்தப்பட்டன.