பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பொதுமக்கள் பலி!

ஜம்மு காஷ்மீரில் கல்வீ சியவர்கள் மீது பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி!!

Last Updated : Jul 7, 2018, 03:37 PM IST
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பொதுமக்கள் பலி! title=

ஜம்மு காஷ்மீரில் கல்வீ சியவர்கள் மீது பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கடந்த சில மாதங்களாக ஜம்முகாஷ்மீரில் பதட்டமான சூழ்நிலையாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில், இன்று ரோந்து சென்ற ராணுவ வாகனம் மீது ஒரு கும்பல் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. கல்வீச்சாளர்களிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில், பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. 

இந்த துப்பாக்கிச்சூட்டில் 16-வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர். துப்பாக்கிச்சூட்டில் 3 பலியான மூன்று பேரின் அடையாளங்களும் தெரியவந்துள்ளது. அனைவரும் குல்காமில் உள்ள ஹவூரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, வதந்திகள் மற்றும் போராட்டங்கள் பரவாமல் தடுக்கும் நோக்கில், குல்காம், அனந்தநாக் ஆகிய மாவட்டங்களில் மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். 

இந்த சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில், ஹுரியத் தலைவர் மிர்விஸ் உமர் ஃபரூக் அதை 'படைகள் படுகொலை' என்று அழைத்தார். "இளைஞர்கள் ஷகிர் அகமது காண்டே (22), இர்ஷாத் மஜீத் (20), இளம் பெண் ஆந்தீப் (16) ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பலத்த எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் பலியானார்கள், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

 

Trending News