JNU வன்முறை திட்டம் தீட்டிய குழு உறுப்பினர்கள் கண்டுபிடிப்பு..

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) வளாகத்தில் ஜனவரி 5-ல் நடந்த வன்முறையுடன் தொடர்புடைய இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழுவை (Unity against Left) டெல்லி போலீஸ் குற்றப்பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு அடையாளம் கண்டுள்ளது.

Last Updated : Jan 12, 2020, 02:53 PM IST
JNU வன்முறை திட்டம் தீட்டிய குழு உறுப்பினர்கள் கண்டுபிடிப்பு.. title=

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) வளாகத்தில் ஜனவரி 5-ல் நடந்த வன்முறையுடன் தொடர்புடைய இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழுவை (Unity against Left) டெல்லி போலீஸ் குற்றப்பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு அடையாளம் கண்டுள்ளது.

டெல்லி காவல்துறையினரின் கூற்றுப்படி, வாட்ஸ்அப் குழுவில் கிட்டத்தட்ட 60 பேர் உள்ளனர், அவர்களில் 37 பேர் சிறப்பு விசாரணைக் குழுவால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கும் SIT, ஜனவரி 5-ஆம் தேதி, இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராக குழு உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளது, இது வர்சிட்டி வளாகத்தில் வன்முறை வெடித்த நாள்.

JNU வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் JNUSU தலைவர் ஆயி கோஷ் உட்பட ஒன்பது சந்தேக நபர்களின் புகைப்படங்களை குற்றப்பிரிவு முன்பு கண்டறிந்து வெளியிட்டது என்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.

SIT சந்தேகப்பட்டியலில் இடம்பெற்றவர்கள்., ஆயிஷ் கோஷ் (JNUSU தலைவர்), விகாஸ் படேல் (எம்.ஏ. கொரிய ஆய்வுகள்), பங்கஜ் மிஸ்ரா (சமூக அறிவியல் பள்ளி), சுச்சுன் குமார் (முன்னாள் JNU மாணவர்), யோகேந்தர் பரத்வாஜ் (பி.எச்.டி சமஸ்கிருதம்), டோலன் சமனாதா (சமூக அறிவியல் பள்ளி), சுசேதா தாலுக்தார் (சமூக அறிவியல் பள்ளி), பிரியா ரஞ்சன் (மொழி மற்றும் கலாச்சார ஆய்வுகள் பள்ளி) மற்றும் வாஸ்கர் விஜய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆயிஷ் கோஷ் பல்கலைக்கழகத்திற்குள் பெரியார் ஹாஸ்டலைத் தாக்கிய ஒரு கும்பலை வழிநடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். எவ்வாறாயினும், வன்முறையில் சர்வர் அறை அழிக்கப்பட்டதாகக் கூறி CCTV காட்சிகளை காவல்துறை முன்வைக்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் இதுவரை யாரையும் தடுத்து வைக்கவில்லை என்று டி.சி.பி (க்ரைம்) ஜாய் டிர்கி தெரிவித்துள்ளார்.

டெல்லி காவல்துறையினரின் கூற்றுப்படி, ஜனவரி 5 வன்முறையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் இடதுசாரி மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்கள்.

அதேவேளையில் JNU வன்முறையில் ABVP ஆர்வலர்கள் ஈடுபடுவதையும் SIT நிராகரிக்கவில்லை. மேலும், வன்முறையில் பல்கலைக்கழகத்தில் அதே பாடத்திட்டத்தில் சேர்ந்த ரோஹித் சிங், பி.ஏ (பிரெஞ்சு) 1 ஆம் ஆண்டு JNU மாணவர் மற்றும் அக்ஷத் அவஸ்தி ஆகியோரின் பங்கையும் குற்றப்பிரிவு விசாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, கும்பல் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுமார் இருபது ABVP  செயற்பாட்டாளர்களும் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

Trending News