அலகாபாத்தில் பிடிப்பட்ட 40-கிலோ ராட்சத மலைப் பாம்பு!

இச்சம்பவம் அலகாபாத்தின் ஷியாமா பிரசாத் முகர்ஜி அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் நடந்ததுள்ளது.

Last Updated : Dec 8, 2017, 12:03 PM IST
அலகாபாத்தில் பிடிப்பட்ட 40-கிலோ ராட்சத மலைப் பாம்பு! title=

அலகாபாத்: உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 12 அடி நீளம் மற்றும் 40கிலோ எடை கொண்ட மலைப் பாம்பு பிடிக்கப்பட்டது!

இச்சம்பவம் அலகாபாத்தின் ஷியாமா பிரசாத் முகர்ஜி அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் நடந்ததுள்ளது.

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த 40 கிலோ பாம்பினை, அக்கல்லூரியின் பேராசிரியர் காப்பாற்றி, பின்னர் அதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த சாகசத்தினை செய்தவர் NB சிங், அக்கல்லூரியின் தாவரவியல் துறையின் மூத்த பேராசிரியர் ஆவார்.

பேராசிரியர் சிங், இதுவரை, ஒரு டஜன் பாம்புகளை பிடித்துள்ளாராம். அவரைப் பொறுத்தவரையில், பாம்புகள் ஆபத்தானவை அல்ல. 

வெளியே சுற்றித் திரியும் பாம்புகளைப் பிடித்து, பாதுகாத்து அவற்றை காட்டில் விடுவதே அவரின் பொழுதுபோக்கு!

Trending News