நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பரிதாபமாக பலி..!

நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு!!

Last Updated : Jul 14, 2019, 09:16 AM IST
நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பரிதாபமாக பலி..! title=

நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு!!

நேபாளம் மற்றும் பீகாரின் ஆறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இங்குள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனனர். மழை நீர் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றுள்ளன.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் நேபாளம் மற்றும் பீகார் நதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இது நேபாளத்தின் லலித்பூர், கோடாங், போஜ்பூர், காவ்ரே, மக்வான்பூர், சிந்துலி மற்றும் தாடிங் ஆகியவற்றுடன் அதிகபட்ச ஆபத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இங்கிருந்து அதிகபட்சமாக இறப்புகள் பதிவாகியுள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையின் பெரும்பகுதிக்கு மிதமான மற்றும் அதிக மழை பெய்யும் என்ற கணிப்புகளுடன் நிலைமை மேம்பட வாய்ப்பில்லை. மழைப்பொழிவு மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் உள்ளூர் அதிகாரிகள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்களைத் தொடர்கின்றனர்.

மேலும், மகோத்தரி மாவட்டத்தில் உள்ள கிழ மேல் நெடுஞ்சாலை பாலம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. 34 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேபாளத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால்  நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Trending News