மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன அருணாச்சல பிரதேசத்தைச் (Arunachal Pradesh) சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தங்கள் எல்லைக்குள் இருப்பதாக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) உறுதிப்படுத்தியதாக மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு (Kiran Rijiju) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இளைஞர்களை ஒப்படைக்கும் முறையின் வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ரிஜிஜு கூறினார்.
“இந்திய இராணுவம் அனுப்பிய ஹாட்லைன் செய்திக்கு சீனாவின் PLA பதிலளித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளைஞர்கள் தங்கள் பக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று ரிஜிஜு ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
China's PLA has responded to hotline message by Indian Army. They confirmed that missing youths from Arunachal Pradesh have been found by their side. Further modalities to handover them to our authority being worked out: Kiren Rijiju, Union Minister and MP from Arunachal Pradesh pic.twitter.com/tRy6hY04hp
— ANI (@ANI) September 8, 2020
இதற்கிடையில், பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்ணல் ஹர்ஷ் வர்தன் பாண்டே, இளைஞர்களைத் திரும்பப் பெறுவதற்கு நிலையான இயக்க நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. காணாமல் போன ஐந்து அருணாச்சல பிரதேச சிறுவர்கள் இருக்கும் இடம் குறித்து இன்று PLA-விடம் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்களை விரைவில் திரும்பப் பெறுவதற்கு நிலையான இயக்க நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன” என்றார்.
மக்கள் விடுதலை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் ஒரு ஹாட்லைன் செய்தியை அனுப்பியதாக ரிஜிஜு கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. PLA-வால் அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து ஐந்து பேர் "கடத்தப்பட்டதாக" வந்த தகவலைத் தொடர்ந்து இந்திய இராணுவமும் சீன இராணுவத்தை அணுகியது.
ALSO READ: கடத்தும் அளவு கீழிறங்கிவிட்டதா சீனா? எல்லையில் குழப்பம் நிறைந்த பீதி!!
கிழக்கு அருணாச்சல் தொகுதியைச் சேர்ந்த எம்.பி. தபீர் காவ் ட்வீட் செய்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. காவ் தனது ட்வீட்டில், “செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் அருணாச்சலில் அப்பர் சுபன்சிரியில் இந்திய எல்லைக்குட்பட்ட மெக்மஹோன் கோட்டிற்கு கீழே உள்ள செரா 7 பகுதியில் இருந்து 5 டேகின் இளைஞர்கள் சீனாவின் PLA-வால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் இதே போன்ற சம்பவம் நடந்தது. CCP க்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம்.” என்று ட்வீட் செய்திருந்தார். ஐந்து இளைஞர்களும் தாகின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவத்தைப் பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ நினோங் எரிங்கும் ட்வீட் செய்திருந்தார். அவர் இந்தியா-சீனா எல்லையில் உள்ள செரா -7 பகுதியில் பி.எல்.ஏ.வால் தனது சகோதரர் மற்றும் நான்கு பேர் கடத்தப்பட்டதாக எழுதிய பிரகாஷ் ரிங்லிங் பேஸ்புக்கில் இருந்து ஸ்கிரீன் ஷாட்களை இணைத்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து உள்ளூர் காவல்துறையினரால் விசாரணை தொடங்கப்பட்டது என்று அருணாச்சல அரசின் மூத்த அதிகாரி முன்பு கூறியிருந்தார்.
கிழக்கு லடாக்கின் பாங்காங் த்சோ (Pangong Tso) பகுதியில் இரு நாடுகளுக்கிடையில் நிலவும் பதட்டத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய இராணுவம் (Indian Army) 3,400 கி.மீ நீளமுள்ள LAC-ல் தனது படைகளை அதிகப்படுத்திய நேரத்தில் இந்த கடத்தல் அறிக்கைகள் வந்துள்ளன.
ALSO READ: எல்லையில் 5 சிறுவர்களை கடத்தியுள்ளதா சீன ராணுவம்? லடாக்கில் குழப்பம் நிறைந்த பீதி!!