இந்தியாவில் இருந்து தப்பிய 51 மோசடி மன்னர்கள் பட்டியல்...

இந்தியாவில் இருந்து தப்பிய 51 மோசடி மன்னர்கள் இதுவரை 17 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை கடனாக பெற்றுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Dec 4, 2019, 02:05 PM IST
  • CBI இன்று வரை 51 தலைமறைவுகள் மற்றும் 66 தப்பி ஓடிய குற்றவாளிகள் மற்ற நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் மொத்தம் சுமார் 17,947.11 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது என CBI தெரிவித்துள்ளது.
  • இந்த சம்பவங்களில் எத்தனை சலுகைகள் வழங்கப்பட்டன அல்லது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்கள் CBI-யிடம் கோரப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து தப்பிய 51 மோசடி மன்னர்கள் பட்டியல்... title=

இந்தியாவில் இருந்து தப்பிய 51 மோசடி மன்னர்கள் இதுவரை 17 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை கடனாக பெற்றுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் செவ்வாயன்று மாநிலங்களவையில் 'தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள்' குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். தப்பியோடியவர்கள் பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.,  CBI இன்று வரை 51 தலைமறைவுகள் மற்றும் 66 தப்பி ஓடிய குற்றவாளிகள் மற்ற நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தாகூர் தெரிவிக்கையில்., 'இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் மொத்தம் சுமார் 17,947.11 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது என CBI தெரிவித்துள்ளது.' இந்த சம்பவங்களில் எத்தனை சலுகைகள் வழங்கப்பட்டன அல்லது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்கள் CBI-யிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பாக தகுதி வாய்ந்த நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை அல்லது பிற நடவடிக்கைகளைத் தொடர ED மற்றும் CBI விண்ணப்பம் தாக்கல் செய்ததாகவும் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கட்டங்களில் நிலுவையில் உள்ள அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் தலைமறைவான நபர்கள் தொடர்பாக 51 ஒப்படைப்பு கோரிக்கைகளில் CBI செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், மற்ற மத்திய நிறுவனங்களைப் பற்றி பேசுகையில்., சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய ஆறு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் குறித்து மத்திய மறைமுக வரி வாரியம் மற்றும் சுங்கத் துறை அறிக்கை அளித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய வங்கிகளிடன் இருந்து சுமார் ரூ. 9000 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இருந்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.  விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளரும் கையெழுத்திட்டுள்ளார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கிடையில் மீண்டும், வங்கி கடனை 100% திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா உறுதியளித்துள்ளார். எனினும் விஜய் மல்லையா வழக்கு இன்றும் முடிவில்லா தொடர் கதையாக நீடிக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி வரை கடன் பெற்ற திருப்பியளிக்காமல் வெளிநாடு தப்பி சென்றதாக தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோரின் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தனித்தனியே முறைகேடு வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமாக இந்தியாவில் இருக்கும் சொத்துக்கள் படிப்படியாக முடக்கப்பட்டு வருகின்றன. என்றபோதிலும் இவர் தொடர்பான வழக்கும் முடியா தொடர் கதையாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News