உத்திரபிரதேச மாநிலத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது!
வடமாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடம் மழை காரணமாக பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் இதுவரை மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியாக சாஹாரன்பூர் பகுதியில் 11 பேர் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து ஆக்ரா மற்றும் மீரட்-ல் 6 பேரும், மனிப்பூரில் 4 பேரும், காஸ்கானி பகுதியில் 3 பேர், பாரேய்லி, பாகப்பட் மற்றும் புலந்தேஷ்ஹார் பகுதியில் 2 பேர் எனவும் கான்பூர், மதுரா, காய்ஜியாபாத், ஹாப்பூர், ரா பெரெய்லி, ஜாலுவான், ஜான்பூர், பிரத்பார்க், பாந்தா, பரிஜாபாத், அமெய்தி, கான்பூர் மற்றும் முஷாபர் நகர் ஆகிய பகுதிகளில் ஒருவர் என பலி எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது.
Total 58 people have died in 31 districts of #UttarPradesh due to heavy rainfall and lightning between 26-28 July. Maximum deaths (11 people) occured in Saharanpur. 53 people have been injured pic.twitter.com/rCDk5AXTo6
— ANI UP (@ANINewsUP) July 28, 2018
இதனையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், மீட்பு பணிகளை கவனிக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிப்பு ஏற்படகூடிய வகையில் இருக்கும் கட்டிடங்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுச் செல்லுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் மருத்தவ கவணிப்பிலும் குறைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.