பாலியல் வழக்கில் சிக்கி 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம் ரஹிம் சிங், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிர்சாவில் உள்ள தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் ஆசிரமத்திற்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி ஹரியானா போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் விசாரணையின் அடுத்தகட்டமாக அங்கு சோதனையும் நடத்தப்பட்டது. இதில் 600 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் குர்மீத் ராம் ரஹிம் சிங்கால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
எரிக்கப்பட்ட நிலையில் இருந்த 600 எலும்புக் கூடுகளை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் 600 எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதையும் போலீசார் வெளியிடவில்லை.
அதேசமயம், தலைமறைவாக உள்ள ராம் ரஹிமின் வளர்ப்பு மகள் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.