பீகாரில் பள்ளி மாணவர்கள் 9 பேர் பலியான விவகாரத்தில் தேடப்பட்டு வந்த கார் ஓட்டுநரான பாரதீய ஜனதாவின் மனோஜ் பைதா சரண் அடைந்து உள்ளார்.
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் மினாபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு பள்ளி கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளி கூடம் முடிந்து பள்ளி மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
முஜாரபர்புர் பள்ளி அருகே வேகமாகச் சென்ற கார், மாணவர்கள் இடையே புகுந்தது. இதில், ஒன்பது குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். அங்கிருந்து தப்பியோடிய பாய்தா மீது, போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
Muzaffarpur Hit & Run Case: Earlier visuals of accused Manoj Baitha (man with red 'gamchha') at Sri Krishna Medical College in #Muzaffarpur. He has surrendered to Police & has been shifted to Patna Medical College for further treatment of injuries he suffered in the accident. pic.twitter.com/AEjL88JomK
— ANI (@ANI) February 28, 2018
இந்த சம்பவத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான மனோஜ் பைதாவுக்கு தொடர்பு உள்ளது என ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை கைது செய்யவும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், 9 மாணவர்கள் பலியான விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மனோஜ் பைதா இன்று சரண் அடைந்துள்ளார்.