ஒவ்வொரு வீட்டு மாடியிலும் ஒரு ஜெட்! இந்தியாவில் வினோத கிராமம்!

ஒவ்வொரு வீட்டு கூரையிலும் ஒரு ஜெட் விமானம்?. இந்தியாவின் பஞ்சாபில் அமைந்துள்ளது வினோதமான ஜலந்தர் கிராமம்!

Last Updated : Apr 30, 2018, 02:56 PM IST
ஒவ்வொரு வீட்டு மாடியிலும் ஒரு ஜெட்! இந்தியாவில் வினோத கிராமம்! title=

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கைகுட்டையில் இருந்து காலில் மாட்டும் ஷூ வரை அனைத்தையும் பாத்து பார்த்துதான் தேர்வு செய்கிறோம். அதுவும் நமக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நாம் நிலைப்பது உண்மை. அதுமட்டும் இல்லாது மத்தவன்கட்ட நாம் கெத்து காட்டுவது என்றால் நம்ம மக்களுக்கு வரும்பாரு ஒரு சந்தோசம், அதை என்னனு சொல்லுறது. 

சரி என்னைக்காவது நீங்க உங்கவீட்டு மாடில உள்ள தண்ணீர் தொட்டி மத்தவங்கள கவர வேண்டும் என்று நினைக்குறீங்களா?. என்ன கேள்வி இது அப்படீன்னு என்ன பாத்து கேக்குறீங்களா?. அட இது உண்மைதாம்பா!. பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற கிராமத்தில் இப்படி ஒரு புதிய முயற்சியில் மக்கள் இறங்கியுள்ளனர்.   

ஜலந்தரில் உள்ள லம்பரா என்ற கிராமத்தில் உள்ள வீடுகளின் கூரைகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள் அவரின் அந்தஸ்தை வெளிப்படுத்துகின்றன. ஒரு நபர் பணக்காரரா இல்லையா என்பதை அவர்களது கட்டிடத்தின் கூரையில் சேமித்திருக்கும் நீர் டாங்கிகள் மூலம் எளிதாக மதிப்பிட முடியுமாம்.

ஒவ்வொரு வீட்டின் கூரையின் மீதும் அவரவர் வசதிக்கேற்ப வடிவமைக்கப்படும் கோழி, குக்கர், கப்பல், குதிரை, சிங்கம், டிராக்டர், பீரங்கி, விமானம் போன்ற டிசைன்களை பொறுத்து அவர்களின் அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறதாம்.

அதுமட்டும் அல்லது குடும்பத்தில் யாரேனும் ராணுவத்தில் பணிபுரிந்தால் அவர்கள் வீட்டு தண்ணீர் தொட்டி ஆர்மி டேங்கர் போல் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதேபோல் குடும்பத்தில் யாரேனும் என்.ஆர்.ஐ உறுப்பினர் எனில் அவரது வீட்டு தண்ணீர் தொட்டி விமானம் போல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அங்கு வசிக்கும் குருதேவ் சிங் என்பவர் தனது வீட்டு கூரையில் சிங்கத்தின் மீது தான் அமர்ந்திருப்பது போல் சிலை வைத்துள்ளார். ஆனால் இதற்கு ஊர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துர்கா தேவி கடவுளை இது அவமதிப்பதாக மக்கள் சொல்லவே தனது உருவத்தை அகற்றி சிங்கத்தை மட்டும் வைத்துள்ளார்.

எப்படில்லாம் யோசிக்குறாங்கனு பாருங்களே...! 

 

Trending News