காவல் நிலையத்திற்கு முன்பு தீ வைத்துக்கொண்ட நபர்

ஆந்திர மாநிலம் சிங்காரயகொண்டா பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு முன்பு ஒரு நபர் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 31, 2019, 01:42 PM IST
காவல் நிலையத்திற்கு முன்பு தீ வைத்துக்கொண்ட நபர் title=

ஹைதராபாத்: ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சிங்காரயகொண்டா பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் இதயத்தை உலுக்கும் விதமாக உள்ளது. சிங்காராய்கொண்டாவில் உள்ள காவல் நிலையத்திற்கு முன்பு ஒரு நபர் பெட்ரோல் ஊத்தி தீ வைத்துக்கொண்டார். தீ விபத்துக்குப் பிறகு, அந்த நபர் காவல் நிலையத்தில் கத்திக்கொண்டு அங்கே சுற்றி வந்துள்ளார் 

இதைப்பார்த்த அங்கு இருந்த போலீஸ்காரர்கள் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் தீயினால் உடல் முழுவதும் காயம் அதிக அளவில் ஏற்பட்டது. தற்போது அந்த நபர் அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. தீ வைத்துக்கொண்ட நபரின் பெயர் நாகராஜூ.

இந்த சம்பவம் குறித்து ஆந்திராவின் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து பேசிய சிங்காரகொண்டா காவல் அதிகாரி, நாகராஜூ மற்றும் அவரது உறவினர் நாகேஸ்வர ராவ் இடையே நிலப்பிரச்சனை தகராறு ஏற்பட்டுள்ளது. அதுக்குறித்து காவல் நிலையத்தில் நாகராஜூ மீது புகார் தெரிவித்தார் அவரது உறவினர். இதை அறிந்த நாகராஜூ, நேற்று மாலை காவல் நிலையத்திற்கு வந்து, போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். 

இதனையடுத்து உதவி துணை ஆய்வாளர் முரளிதர், நாகராஜூ மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி இருக்கிறார். இதனால் மனம் உடைந்த நாகராஜூ காவல் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார் எனக் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

Trending News