தீவிரவாதிகளுடனான மோதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு - ஜம்மு காஷ்மீர்

Last Updated : Jun 15, 2016, 11:26 AM IST
தீவிரவாதிகளுடனான மோதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு - ஜம்மு காஷ்மீர் title=

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சில் செக்டாரின் எல்லைக்கட்டுப்பாடு பகுதி அருகே தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தீவிரவாதிகளும் திருப்பி சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நீடித்த இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். 

இந்திய ராணுவத்தை சேர்ந்த ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் வீரமரணம் அடைந்ததாகவும் தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News