டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்த கமல் இன்று சோனியாவை சந்தித்துள்ளார்.
இது குறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது,,!
மரியாதை நிமித்தமாகவும், தமிழகத்தில் நிலவும் சில நிகழ்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதர்க்காகவும், சோனியா காந்தியை சந்தித்ததாக, விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, இந்தாண்டின் பிப்ரவரி மாதத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். இதனையடுத்து தனது கட்சியை முறைப்படி பதிவு செய்ய, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து, கட்சியினை பதிவு செய்வதில் யாருக்கும் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், யாரும் ஆட்சேபம் தெரிவிக்காததை அடுத்து கமல்ஹாசனை தேர்தல் ஆணையம் அழைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக டெல்லி சென்ற கமல்ஹாசன். அதன்பின்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து, இன்று சோனியாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார் என்பது குறிபிடத்தகது.