மறைந்த நடிகர் புனித் குறித்து உருக்கமாக பேசிய நடிகர் விஷால்!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29-ம் தேதியன்று மாரடைப்பால் மரணமடைந்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2021, 05:40 PM IST
மறைந்த நடிகர் புனித் குறித்து உருக்கமாக பேசிய நடிகர் விஷால்! title=

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29-ம் தேதியன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.  இந்த செய்தி திரையுலகினரை மட்டுமல்லாது, சாமானிய மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரது கண் தானத்தை தொடர்ந்து, கர்நாடகாவில் 6000-க்கும் மேற்பட்டவர்கள் கண் தானம் செய்துள்ளனர். இறந்தும் இவரின் புகழ் திக்கெட்டிலும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றது. புனித் பலருக்கும் பல்வேறு உதவிகளை செய்தவர் அதில் குறிப்பாக பல குழந்தைகளுக்கு கல்வி வழங்கினார்.

ALSO READ சிக்கிய சந்தானம்; எஸ்கேப் ஆன அன்புமணி!

இவரின் இறப்பு செய்தி பலருக்கும் பேரிடியாக இருந்தது.  பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், நடிகர் விஷால் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் புனித் குமார் சொந்த செலவில் படிக்க வைத்திருந்த, 1800 குழந்தைகளின் கல்விச் செலவை, தான் ஏற்றுக்கொள்வதாக கூறினார். இந்நிலையில் நேற்று புனித் குமாருக்கு நினைவஞ்சலி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஷால் புனித் பற்றி கூறுகையில், "சகோதரர் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தியை இன்றளவும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  என்னை பொருத்தவரை புனித் நம்மைவிட்டு உடலாக பிரிந்துள்ளாரே தவிர உணர்வாக அல்ல.  நம் அனைவருக்கும் ஒரு நல்ல ஆசானாகவே இருந்து சென்றுள்ளார்.  அவரது இறப்பின் போது அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம் சொன்னது அவரது சகாப்தத்தை.

vishal

அவரது நல்ல குணங்களையும், நற்பண்புகளையும், அவரின் கனவுகளையும் நாம் அனைவரும் காப்பாற்றி கடைப்பிடித்து செல்வோமாயின் நம் அனைவரின் உள்ளத்திலும், எண்ணத்திலும் புனித் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார். நான் இந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டது அவரது லட்சியக்கடலில் ஒரு துளி ஆகும்.  என்னால் முடிந்ததை நான் செய்கிறேன், புனித்தின் குடும்பத்தினரின் அனுமதியோடும், என் தந்தைக்கு பெறாத பிள்ளை புனித் என்ற முறையிலும், என் உடன்பிறவா அண்ணன் என்ற உரிமையிலும் நான் இதை செய்ய விரும்புகிறேன்.  இது சேவை என்பதை தாண்டி புனித்திற்கு நான் செய்ய வேண்டிய கடமையாக பார்க்கின்றேன்.  புனித்தின் பெயரில், புனித்தின் சார்பில் நான் ஒரு கருவியாக செயல்படவே விரும்புகின்றேன்.  

புனித் மீது நாங்கள் கொண்ட அன்பு ஜாதி, மதம், மொழி இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது. கலைஞனை ஒரு வரையறைக்குள் அடைக்க முடியாது.  ஒரு நல்ல கலைஞர், மிகச்சிறந்த மனிதர் புனித்திற்காக இக்குழந்தைகளின் கல்வி செலவை ஏற்று அதை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொள்வேன்.   இதிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளின் முகத்திலும் நான் புனித பார்க்கிறேன் மறுபடியும் சொல்கிறேன்.  புனித் நம்முடன் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்.  உயிராக அல்ல, உணர்வாக.  உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் இதை வழி நடத்தி செல்ல நான் விரும்புகின்றேன்".  இவ்வாறு புனித் பற்றி நடிகர் விஷால் உருக்கமாக கூறினார்.

ALSO READ பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா - விஜய்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News